Monday, April 23, 2012

Akshaya Tritiya -

Today 24/Apr/12 is Akshaya Tritiya.

Akshaya Tritiya, also known as Akha Teej is a Hindu and Jain holy day, that falls on the third Tithi (Lunar day) of Bright Half (Shukla Paksha) of the pan-Indian month of Vaishakha. It is an auspicious day of the birthday of Lord Parasurama who is the sixth incarnation of Lord Vishnu. On this day Veda Vyas and Lord Ganesha began to write Mahabharata. The meaning of the word Akshaya is infinite that which never recede.


As per Hindus, this day is ruled by god Vishnu, the preserver-god in the Hindu Trinity. It is also traditionally celebrated as the birthday of the Hindu sage Parashurama, the sixth Avatar (incarnation) of the god Vishnu. According to Hindu mythology, on this day the Treta Yuga began and the river Ganges, the most sacred river of India, descended to the earth from the heaven.

The word "Akshaya" means the never diminishing in Sanskrit and the day is believed to bring good luck and success. It is believed that if you do charity on this day you will be blessed. On 'Akshay Tritiya' 'Mrutika' also worshipped. Nowadays jewellers have turned the purity into a marketing gimmick. The day is considered auspicious for starting new ventures. The legend is that any venture initiated on the auspicious day of Akshaya Tritiya continues to grow and bring prosperity. Hence, new ventures, like starting a business, construction etc. is initiated on Akshaya Tritiya.

P Renjith Kumar
Thanks:Wikipedia



Sunday, February 19, 2012

மகா சிவராத்திரி

20/02/2012


இன்று "மஹா சிவராத்திரி"



சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும் அழைப்பதுண்டு.

இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல் ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.


இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில் அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும்

உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல் வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத்தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும்.


சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல் நன்று.


சிவராத்திரி வகைகள்

நித்திய சிவராத்திரி,

பட்ச சிவராத்திரி,

மாத சிவராத்திரி,

யோக சிவராத்திரி,

மகா சிவராத்திரி

என 5 வகைப்படும்.


மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர் ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.

விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம் செய்தலும் உகந்ததாகும்.


சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர் விளக்கியுள்ளார்.

பாடல்

"மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப் பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே "


சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.

முதலாம் யாமம்
முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம்.


இரண்டாம் யாமம்
இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.


மூன்றாம் யாமம்
மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும்.

நான்காம் யாமம்
நான்காம் யாமத்தில் கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால் அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம்.

பின்னணி
சிவராத்திரியின் பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான் ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.

அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல் நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை சாட்சி கூறவும் வைத்தார். பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில் காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும் முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும்.



தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ


Palaniswamy Renjith Kumar

நன்றி :
vivekanandan.blogspot.com
http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_27.html
ramanas.wordpress.com

Maha Shivaratiri - மஹா சிவராத்திரி

.
20-02-1012

இன்று மஹா சிவராத்திரி ... சிவ பெருமானை வழிபட்டு அருள் பெறுவோம் ..



Maha Shivratri, the night of the worship of Lord Shiva, occurs on the 14th night of the new moon during the dark half of the month of Phalguna. It falls on a moonless February night, when Hindus offer special prayer to the lord of destruction. Shivratri (Sanskrit 'ratri' = night) is the night when he is said to have performed the Tandava Nritya or the dance of primordial creation, preservation and destruction. The festival is observed for one day and one night only

Origin of Shivratri:

According to the Puranas, during the great mythical churning of the ocean called Samudra Manthan, a pot of poison emerged from the ocean. The gods and the demons were terrified as it could destroy the entire world. When they ran to Shiva for help, he in order to protect the world, drank the deadly poison but held it in his throat instead of swallowing it. This turned his throat blue, and since then he came to be known as 'Nilkantha', the blue-throated one. Shivratri celebrates this event by which Shiva saved the world.
 
A Festival Significant for Women :

Shivratri is considered especially auspicious for women. Married women pray for the well being of their husbands and sons, while unmarried women pray for an ideal husband like Shiva, who is the spouse of Kali, Parvati and Durga. But generally it is believed that anyone who utters the name of Shiva during Shivratri with pure devotion is freed from all sins. He or she reaches the abode of Shiva and is liberated from the cycle of birth and death.
 
Here're three reasons to celebrate Shivratri:
 
1. The absolute formless God, Sadashiv appeared in the form of "Lingodbhav Moorti" exactly at midnight on Maha Shivratri. That is why all Shiva devotees keep vigil during the night of Shivratri and do "Shivlingam abhishekham" (coronation of the phallic idol) at midnight.
 
2. Lord Shiva was married to Devi Parvati on Shivratri. Remember Shiva minus Parvati is pure 'Nirgun Brahman'. With his illusive power, (Maya, Parvati) He becomes the "Sagun Brahman" for the purpose of the pious devotion of his devotees.

3. It is also believed that on Shivratri, Lord Shiva became 'Neelkantham' or the blue-throated by swallowing the deadly poison that came up during the churning of "Kshir Sagar" or the milky ocean. The poison was so deadly that even a drop in His stomach, which represents the universe, would have annihilated the entire world. Hence, He held it in His neck, which turned blue due to the effect of poison. Shivratri is therefore also a day of thanksgiving to the Lord for protecting us from annihilation.



தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ


Thanks :
hinduism.com, ramanas.wordpress.com

By
Palaniswamy Renjith Kumar

Monday, December 26, 2011

ஆஞ்சநேயர் - துதிப் பாடல்

.


அஞ்சிலே ஒன்று பெற்றான்;
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
அவன் எம்மை அளித்துக் காப்பான்

                                 - இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.


முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.

அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)

கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.

எனவே தான் ஆஞ்சநேயராகிய அனுமனை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள். அந்த வகையில் தினமும் ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.

எனவே இனி அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான அஞ்சிலே பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

ஸ்ரீ ராம ஜெயம் .

Sunday, October 2, 2011

புதுமனை புகும்போது கன்றுடன் பசுவை உள்ளே அழைப்பது ஏன்?

.
பசுவின் உடலில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக கருதுவதால் பசுவை தரிசனம் செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சம் உருவாகும். பசுவிற்கு பூஜை செய்வது, பணிவிடைகள் செய்வது, வைக்கோல் போடுவது, கழுத்தில் ஆதரவாகத் தடவி கொடுப்பது, புல் அள்ளிப் போடவது, மேய்வதற்கு பூமியை அளிப்பது போன்றவைகளை செய்வதால் மிகுந்த புண்ணியம் வந்து சேரும். புதுவீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது பசுவும், கன்றும் கொண்டு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் போது  மகாலெட்சுமி வீட்டிற்கு வருவதாக நம்பிக்கை. கன்றில்லாமல் பசுவை மட்டும் அழைக்கக் கூடாது


By
P Renjith Kumar

Source : Dinamallar

Sunday, August 28, 2011

என் பெற்றோர் எனக்கு புகட்டும் அனுபவ பாடம்

.
என் பெற்றோர் எனக்கு புகட்டும் அனுபவ பாடம்

என் பெற்றோர் செய்த ஒரு நற்செயலை நான் இங்கு சொல்ல அசை படுகிறேன். பல செயல்கள் இது போல செய்து இருந்தாலும் இதைநான் மறக்க கூடாது என்று இங்கு பதிவு செய்கிறேன்.

சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரும் பள்ளியின் பேருந்து நிலையம் அருகில் என் சித்தியை பஸ் ஏற்றி விட சென்ற போது அங்கு இரு இளம் வயது பெண்கள் முகத்தில் சிறிது கலக்கத்துடன் காண படவும் என் அன்னை அதை புரிந்து கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க...அவர்கள் இருவரில் ஒருவர் பெங்களூரில் இருந்தும், இன்னொரு பெண் ஊட்டியில் இருந்தும் C.T.S கோயம்புத்தூர் கம்பெனியில் பனி புரிவதாகவும், ஈச்சனாரி என்னும் புகழ் பெற்ற விநாயகர் கோவிலுக்கு பேருந்து ஏறி வரும் போது, ஈச்சனாரி என்று சொலாததால், இந்த கிராமத்தின் வழியே வரும் மினி பஸ் இங்கு உள்ள விநாயகர் கோவிலில் இறக்கி விட்டு விட்டதாகவும், இப்போது தங்கள் ரூம் வரை மீண்டும் திரும்பி செல்ல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எங்கு உள்ளது என்று கூட தெரியாது என்று கலக்கத்துடன் கூறினர்.

உண்மையில் பேருந்து நிலையம் 1.5 k.m நடந்து செல்ல வேண்டும், ஏன் என்றால் அவர்கள் எங்கள் கிராமத்தின் மத்தியில் இறங்கி விட்டனர். மினி பஸ்ஸூம் உடனே அங்கு திரும்பி வராது உடனே என் அன்னை அவர்கள் நிலையை புரிந்து கொண்டு, என் அப்பாவை புறப்பட்டு அங்கு வர சொன்னார். என் அப்பாவும் அங்கு சென்றார். உடனே என் அன்னை அவர்களிடம், நீங்கள் எங்கோ இருந்து ஆசையுடன் இங்கு ஈச்சனாரி விநாயகரை தரிசிக்க வந்திருக்கிறீர்கள், இப்போது இருட்டிவிட்டது உங்களுக்கு ஊரும் புதியது, எனவே நாங்கள் இருவரும் உங்களுக்கு ஈச்சனாரி விநாயகர் கூடி கொண்டு போய் காண்பிக்கிறோம் என்று, 1.5 km நால்வரும் நடந்து சென்று, ஈச்சனாரி செல்லும் பேருந்து ஏறி, அங்கு சென்று கோவிலை சுற்றி காண்பித்து, அங்கு தங்க தேர் பவனி வரும் போது அதையும் காண்பித்து, அவர்களை நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய வைத்து, அங்கு இருந்து அவர்கள் தங்கி இருக்கும் இடம் வரை நங்கள் வந்து விடட்டுமா என்று கேட்க அந்த இரு பெண்களும், இல்லை எங்களுக்கு காந்திபுரம் பேருந்து ஏற்றி விட்டால் நங்கள் அங்கிருந்து எளிதாக சென்றுவிடுவோம் என்று கூற, காந்திபுரத்திலிருந்து கண்டிப்பாக அவர்களுக்கு வழி தெரியுமா என்பதை அவர்களிடம் மீண்டும் உறுதி படுத்திக்கொண்டு, அவர்களுக்கு அங்கிருந்து வழி தெரியும் என்று தெரிந்தவுடன் சரி நங்கள் இங்கு இருந்து நேராக காந்திரம் செல்லும் பேருந்து ஏற்றி விடுகிறோம் என்று என் பெற்றோர் கூறினர். பிறகு அந்த இரு பெண்களும், என் பெற்றோரை தாங்கள் இருவருக்கும் மலர் தூவி ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டு கொண்டனர், அவர்களும் என் பெற்றோருக்கு பிள்ளைகள் போல தானே... என் பெற்றோரும் அவ்வாறே அந்த பிள்ளைகளுக்கு..என் சகோதிரிகளுக்கு ஆசிர்வாதம் செய்து பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ ராம ஜெயம் .
ஈச்சனாரி விநாயகரே சரணம்.

இப்படிக்கு
ப. ரஞ்சித் குமார்
P Renjith Kumar


Sunday, August 14, 2011

Happy Indian Independence Day

.
August 15 - The Great Day for India.
HAPPY INDIAN INDEPENDENCE DAY.

Regards
P Renjith Kumar

முருக பெருமானும் இந்து மத தத்துவமும்

.
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி. சரி; அந்த அறுபடை நாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே இதற்கென்ன பொருள்? தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம்; வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணருக்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை உயர் யோக நிலையை மட்டுமல்ல; இவ்வுலக வாழ்க்கைத் தேவையான பலத்தையும் யோகத்தை மட்டுமல்லாது, போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் கந்தக் கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை மட்டுமல்ல; மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.

தீயவர்களை அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகனுக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க அழிக்க தேவநிலை துணைவரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ பொருள் வசதி பெருக கஷ்டப்பட வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது. உலகியல் வாழ்வுக்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் வேலவர். சரி; சேவற்கொடி எதற்கு? இவ்வுலக மாந்தர் விழிக்க குரல் கொடுக்கும் பறவை சேவல். விடியலைக் கொண்டாட அழைப்பு விடும் பறவை. உள்ளே உன்னித்து தியானநிலை அடையாது வெறுமனே உறங்குகின்ற மனிதர்களை, எழுந்திருங்கள் எழுந்திருங்கள்; எழுந்து உள்ளே விழிப்படையுங்கள் என்று அழைக்கும் விதமாக சேவற்கொடி. பாம்பும் மயிலும் வேலும் என்ன சொல்கின்றன? உள்பொங்கும் சக்தியின் விழிப்பு நிலை பாம்பு. யோகவழி பயணிக்க பயணிக்க முகம் பொலிவுறும் சிறப்பைக் கூற மயில். தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலினி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

எப்போதும்... எப்போதும் உன்னுள்ளே தீயவை அகற்றும் பணியைச் செய்து கொண்டிருக்க சத்தியம் எனும் வேலைத் துணையாக வைத்திரு எனும் செய்தி சரவணகுமரனின் வேல் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவரின் படைவீடுகள் அமைந்திருப்பது அசுரரை அழிக்க மட்டுமல்ல; திசைதோறும் நின்று பக்தர்களைத் துரத்தும் துன்பங்களை நீக்கவும்தான். இந்த ஆறு படை வீடுகளை முழுமையான இறைநினைப்போடு தரிசித்தவர்கள் முருகக்கடவுளின் அருள் நிரம்பப் பெற்று வீடுபேறு அடைவார்கள்; விதியினை வெல்வார்கள்; காலத்தை ஊடுருவும் கலைகள் எல்லாம் கைவரப் பெறுவார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களின் இருப்பை தன்னுள் தரிசித்து, ஏழாவதாய் இருக்கும் சகஸ்ரார சக்கரத்தைத் தொடுவார்கள். வேலவன் பிரணவ மந்திரத்தின் பொருள் உணர்த்தும் தேவன். ஓமென்று உள் நின்ற உத்தமர்க்கெல்லாம் ஓடி வந்து உடன் உதவிடும் நாதன். வேண்டி நிற்பது எதுவாயினும் விரைந்து கொடுக்கும் முமரக்கடவுள். அபயம் என்றே அவனை நம்பி அனுதினமும் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு அன்பனாய் நண்பனாய் வந்து நன்றாய் அருளிடும் அறுமுகத்தான். எண்ண எண்ண இன்னும் ஏராளம் உண்டு நம் அழகனின் பெருமைகள். இவை உணராமல் வாதம் செய்து பிறவிகள் வளர்ப்போரை பிணி கண்டு தவிப்போரை விட்டுத் தள்ளுவோம். இந்து மதம் கூறும் இனிய தத்துவங்களை அதன் ஆழங்களை சூட்சுமங்களை சிந்திக்கத் தலைப்படுவோம். வானத்தை பூமியை நட்சத்திரங்களை கோள்களை இப்பெரிய பிரபஞ்சத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தான சக்தியை ஏதேனும் ஒரு பெயரில் நித்தம் நித்தம் வணங்கி நின்றிடுவோம்.

Thanks : Dinamalar
 
Regards
P Renjith Kumar

Wednesday, May 25, 2011

பொறுமை

.
ஒரு ஊரில் ஒரு பத்து வயது ஆன சுட்டி பெண் ஒருவள் இருந்தாள் தினமும் கல்வி மற்றும் விளையாட்டு என்று காலம் சென்றது, ஒருநாள் அவள் கேள்விப்பட்டது என்னவென்றால் கடவுள் மனிதர்களுக்கு ஒரு ஆப்பிள் பழம் தருகிறார் என்று, ஆனால் அதற்காக சுவர்க்கம் வரை சென்று காத்திருக்க வேண்டும் என்று கேள்விபட்டாள், உடனேயே அவளும் ஆப்பிள் பழம் கடவுள் கையால் வாங்க புறப்பட்டாள், பல நாட்கள் கழித்து சுவர்க்கம் வந்து சேர்ந்தாள் . மிக பெரிய மக்கள் வரிசை ஆப்பிள் வாங்க காத்து கிடந்துது, அதை கண்டு மலைத்து போனாள் .. பிறகு எப்படியாவது ஆப்பிள் வாங்க வேண்டும் என்று அவளும் வரிசையில் நின்று ஆப்பிள் வாங்க ஆவளோடு காத்திருந்தாள், அவள் கடவுள் அருகில் வந்தாள் .. கடவுள் கொடுக்கும் ஆப்பிள் வாங்கும் பொது ஆப்பிள் அந்த சின்னம் சிறிய கைக்குள் சிக்காமாலையே கிழே விழுந்தது, அதை அவளால் எடுக்க முடியவில்லை, பிறகு சிறிது நேரம் கழித்து கடவுளிடம் இருந்த தேவதைகள் அவளை பார்த்து “உன்னக்கு மீண்டும் ஆப்பிள் வேண்டும் என்றால் நீ மீண்டும் வரிசையில் வர வேண்டும்” என்று கூறினார்கள். அதை கேட்ட சின்ன குழந்தை, “நான் பூமியில் இருந்து இவ்வளவு நாட்கள் நடந்து வந்தது கடவுள் கையால் ஆப்பிள் வாங்க தான் , அனால் இன்று அது எவ்வாறோ தவறி விழுந்து விட்டது, எனினும் நான் இங்கு மீண்டும் வரிசையில் சென்று கடவுள் கையால் ஆப்பிள் வாங்க வேண்டும் அது தான் என் ஆசை” என்று மீண்டும் வரிசியில் கடைசி ஆளாக செண்டு நின்றாள். பிறகு அந்த பெண் ஆப்பிள் வாங்கி வருவோர் எல்லோரையும் பார்த்தாள், அவள் பார்த்த எல்லோரும் ஆப்பிள் பழத்தை கிழே போடாமல் கொண்டுவருவதை பார்த்து தன் சிறிய கையை நினைத்து வருந்தினாள், இந்த முறை எப்படியாவது ஆப்பிள் பழத்தை கீழே போடாமல் இருக்கவேண்டும் என்று அதை பற்றி பலமாக சிந்தித்து வந்தாள் ... கடவுள் அருகில் வந்தவுடன் தன் கையை நன்று இறுக்கமாக வைத்து கொண்டாள், கடவுளிடம் கையை நீட்டினாள் ...கடவுள் அவளை பார்த்து, அவள் தலையை தடவி, “மகளே சென்ற முறை நீ வந்த போது நான் அறியமால் உன்னக்கு பழைய மற்றும் சிறிது கேட்டு போன ஆப்பிள் பழத்தை கொடுத்து விட்டேன், அதை கண்டவுடன், நான் அதை கீழே விழும்படி செய்து விட்டேன், பிறகு உனக்காக மிகவும் வருந்தினேன், அதனால் அடுத்த முறை உன்னக்கு உலகிலேயிய மிக சிறந்த பழம் தான் தரவேண்டும் என்று முடிவு செய்தேன்... அந்த பழம் விளைய சிறிது காலம் தேவை பட்டது, அதன் காரணமாக தேவதைகள் மூலமாக உன்னை வரிசையில் சிறிது நாள் காக்க சொன்னேன், நீயும் அவ்வாறே செய்தாய் ... இதோ இப்போது நான் கொடுக்கும் இந்த பழம் உலகிலேயே இதுவரை இருந்த ஆப்பிள் பலத்திலேயே சிறந்த ஆப்பிள், இதை பெற்றுகொள் என் அன்பு மகளே ” என்றார் ... அவள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தால்.. இந்த முறை ஆப்பிள் கீழே விழவில்லை.. அவள் ஆனந்தத்தில் திளைத்து பூமி வந்தாள் ..


அதாவது நீங்கள் உங்கள் 100% முழு முயற்சியையும் ஒரு செயலில் போட்டு அதன் பிறகும்  உங்களுக்கு தோல்வி வந்தால் துவள வேண்டாம் அது காலம் கடந்து சென்றால் வருந்த வேண்டாம் ... உங்களுக்காக கடவுள் மிக சிறந்ததை கொடுக்க காத்திருக்கிறார் .. பொறுமையுடன், முழு திறமையுடன் நம்பிக்கை தளராது  உங்கள் செயலை செய்து வாருங்கள் .. உங்கள் பொறுமை ஒருநாள் உங்களுக்கு அதன் பலனை தரும்..

By
P Renjith Kumar