.
இன்று விஜய தசமி, அதாவது நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரிகள் துர்க்கை அம்மன் மகிசாசூரன் உடன் சண்டை இட்டு தசமி என்னும் பத்தாவது நாளில் விஜயம் என்னும் வெற்றி பெற்ற நாள். சடங்காக பார்த்தால் இந்த நாளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, பொறி கடலை சாப்பிட்டு மகிஷனை வதைப்பது போன்று ஏற்பாடு செய்து முடித்து விடலாம், ஆனால் இது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் வெறும் சடங்கே. அன்று மகிஸாசூரனை துர்க்கை அம்மன் வதைத்தது இன்று நமக்கு எப்படி பயன்படும் என்று கேட்டாலே நம்மில் பல பேருக்கு பதில் தெரியாது அதனால் உண்மையில் இன்று பயனும் இல்லை. வெறும் சடங்காக செய்தால் இப்படி தான் இருக்கும்.
நம்மில் பலருக்கு சில பல விட்டு ஒழிக்க முடியாத கெட்ட பழக்கங்கள் இருக்கலாம், அதை ஒரு அரக்கனாக பாவித்து ஒன்பது நாள் துர்க்கை அம்மன் அருளால் எதிர்த்து போராடி அதை உங்கள் வாழ்க்கையில இருந்து விலக்கி வெற்றி பெற வேண்டி அதை அம்மன் அருளால் விலக்கி வெற்றி பெற்றால் அது தான் துர்க்கை அம்மன் திருவருளால் அம்மன் நமக்கு தந்த நமக்கே சொந்தமான விஜய தசமி. இப்படி செய்யும் போது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டாகும் நம் வாழ்க்கை உயரும்.
பொதுவாக நவராத்திரி கொலுவில் கீழ படியில் சாதாரண மனிதர் பொம்மை இருக்கும், பிறகு அடுத்த படியில் சில தியாகிகளை வைத்திருப்பார், பிறகு இன்னும் மேலே சென்றால் சான்றோர், சன்யாசிகள் போன்ற தர்மவாங்களை வைப்பர், பிறகு மேலே செல்ல செல்ல தெய்வ நிலை கொண்ட பொம்மைகள் வரும், அதாவது கொலுவில் கீழ படியில் மனிதரை வைத்து ஒவ்வொரு படி உயர தெய்வ நிலையை கூட்டுவது போல நாமமும் தர்ம நெறியுடன் வாழ்கையில் ஒவ்வொரு படியாக மேன்மக்களாய் வாழ துர்க்கை அம்மன் துணை புரிவார்.
துர்க்கை அம்மனே போற்றி
Regarda
P Renjith Kumar
Tuesday, October 23, 2012
Monday, October 22, 2012
Happy Saraswathi Pooja
.
On the day of saraswathi pooja i have created this blog. Hence this saraswathi pooja is this blogs birthday :)
Happy saraswathi pooja and vijaya dasami.
Regards
P Renjith kumar
On the day of saraswathi pooja i have created this blog. Hence this saraswathi pooja is this blogs birthday :)
Happy saraswathi pooja and vijaya dasami.
Regards
P Renjith kumar
Subscribe to:
Posts (Atom)