Showing posts with label வாழ்வியல் தத்துவங்கள். Show all posts
Showing posts with label வாழ்வியல் தத்துவங்கள். Show all posts

Tuesday, November 3, 2015

நைசா பேசறவனும் , கோபமா பேசறவனும்

.


நைசா பேசறவனை நல்லவன் என்றும் ....
கோபமா பேசறவனை கேட்டவன் என்றும் ....

இந்த உலகத்தில் பல பேர் நினைக்கின்றனர்


ஒருவன் கோபத்தில் நியாயம், மற்றும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
இருந்தால் அந்த கோபம் மிக சிறந்ததே
.


உங்கள் ஈகோ வை விட்டு ஒருவன் ஏன் கோபமாக பேசுகிறான் என்று ஆராயுங்கள் பிறகு
ஒரு முடிவு எடுங்கள்


உங்களிடம் ஒருவன் நீங்கள்  என்ன செய்தலும் சரி என்பவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் நைசாக பேசி உங்களை நாசம் செய்து விடுவான்  சில சமயம் 


Regards
P Renjith Kumar

Friday, October 30, 2015

Who is a real made for each other couples?

.
T
Just had a random thought on love at 4.30 AM in morning, so immediately writing up as I could not resist to write later.


These days I could see many lovers saying "Made for each other" when they love, but eventually when they broke up all these words fly away.
 
In the Tamil movie Raja Rani there is a famous dialogue
"Yarum porakkum bothey ‘Made for Each Other’ ah porakuradhu illa Surya. Vaazhndhu kaaturadhula dhan. " . ( in the movie raja rani )


Which can be see as
" Made for each other means it is not some thing that is determined during birth, it is determined on the way a couples live and show that to the world".

 
So here after if you want to use the term made for each other, use with with more awareness. You cannot become made for each othe just in one day, it is a process, it is a transformation in you.
 
How Made for each other happens?
 
  • First you both will become "Really MAD" for each other, you both will go crazy about each.
  • Both of you will not be worried about being so mad or so crazy or so loving to other and this is where your ego go away and pure love emerges.
  • Your position, education, salary, status all will fade away and it will not be a blocking factor and you see only others love only as the priority.
  • Then later transformation happens and soon you will have un conditional love between each of you. There is no fault finding in pure love, you just love for sake of love. 
  • There is no ego in un conditional love. What is remaining is love between then that's all.
  • When the love is unconditional the divinity blossoms between the couples and it bless them.
  • There is a highest level of trust between both the couples.
  • Then they become made for each other.
  • With their real love they do not hate anyone in their family nor cheat anyone, just love all around them. No hatred, Only Love.
  • They show the world the power of pure love. Divinity is there in that love. It is the purest.
So only if your love have the quality use the term "Made for each other" like that, else ... You know


Regards
P Renjith Kumar

Thursday, March 27, 2014

எனது சிந்தனைகள் - 1

இல்லத்தில் ஒழி வீச நல்ல எண்ணையால் விளக்கு வையுங்கள்
வாழ்கையில் ஒழி வீச நில்ல எண்ணம் இல்லாதவர்களை உங்களிடம் இருந்து விளக்கி வையுங்கள்

P Renjith Kumar

Wednesday, May 25, 2011

பொறுமை

.
ஒரு ஊரில் ஒரு பத்து வயது ஆன சுட்டி பெண் ஒருவள் இருந்தாள் தினமும் கல்வி மற்றும் விளையாட்டு என்று காலம் சென்றது, ஒருநாள் அவள் கேள்விப்பட்டது என்னவென்றால் கடவுள் மனிதர்களுக்கு ஒரு ஆப்பிள் பழம் தருகிறார் என்று, ஆனால் அதற்காக சுவர்க்கம் வரை சென்று காத்திருக்க வேண்டும் என்று கேள்விபட்டாள், உடனேயே அவளும் ஆப்பிள் பழம் கடவுள் கையால் வாங்க புறப்பட்டாள், பல நாட்கள் கழித்து சுவர்க்கம் வந்து சேர்ந்தாள் . மிக பெரிய மக்கள் வரிசை ஆப்பிள் வாங்க காத்து கிடந்துது, அதை கண்டு மலைத்து போனாள் .. பிறகு எப்படியாவது ஆப்பிள் வாங்க வேண்டும் என்று அவளும் வரிசையில் நின்று ஆப்பிள் வாங்க ஆவளோடு காத்திருந்தாள், அவள் கடவுள் அருகில் வந்தாள் .. கடவுள் கொடுக்கும் ஆப்பிள் வாங்கும் பொது ஆப்பிள் அந்த சின்னம் சிறிய கைக்குள் சிக்காமாலையே கிழே விழுந்தது, அதை அவளால் எடுக்க முடியவில்லை, பிறகு சிறிது நேரம் கழித்து கடவுளிடம் இருந்த தேவதைகள் அவளை பார்த்து “உன்னக்கு மீண்டும் ஆப்பிள் வேண்டும் என்றால் நீ மீண்டும் வரிசையில் வர வேண்டும்” என்று கூறினார்கள். அதை கேட்ட சின்ன குழந்தை, “நான் பூமியில் இருந்து இவ்வளவு நாட்கள் நடந்து வந்தது கடவுள் கையால் ஆப்பிள் வாங்க தான் , அனால் இன்று அது எவ்வாறோ தவறி விழுந்து விட்டது, எனினும் நான் இங்கு மீண்டும் வரிசையில் சென்று கடவுள் கையால் ஆப்பிள் வாங்க வேண்டும் அது தான் என் ஆசை” என்று மீண்டும் வரிசியில் கடைசி ஆளாக செண்டு நின்றாள். பிறகு அந்த பெண் ஆப்பிள் வாங்கி வருவோர் எல்லோரையும் பார்த்தாள், அவள் பார்த்த எல்லோரும் ஆப்பிள் பழத்தை கிழே போடாமல் கொண்டுவருவதை பார்த்து தன் சிறிய கையை நினைத்து வருந்தினாள், இந்த முறை எப்படியாவது ஆப்பிள் பழத்தை கீழே போடாமல் இருக்கவேண்டும் என்று அதை பற்றி பலமாக சிந்தித்து வந்தாள் ... கடவுள் அருகில் வந்தவுடன் தன் கையை நன்று இறுக்கமாக வைத்து கொண்டாள், கடவுளிடம் கையை நீட்டினாள் ...கடவுள் அவளை பார்த்து, அவள் தலையை தடவி, “மகளே சென்ற முறை நீ வந்த போது நான் அறியமால் உன்னக்கு பழைய மற்றும் சிறிது கேட்டு போன ஆப்பிள் பழத்தை கொடுத்து விட்டேன், அதை கண்டவுடன், நான் அதை கீழே விழும்படி செய்து விட்டேன், பிறகு உனக்காக மிகவும் வருந்தினேன், அதனால் அடுத்த முறை உன்னக்கு உலகிலேயிய மிக சிறந்த பழம் தான் தரவேண்டும் என்று முடிவு செய்தேன்... அந்த பழம் விளைய சிறிது காலம் தேவை பட்டது, அதன் காரணமாக தேவதைகள் மூலமாக உன்னை வரிசையில் சிறிது நாள் காக்க சொன்னேன், நீயும் அவ்வாறே செய்தாய் ... இதோ இப்போது நான் கொடுக்கும் இந்த பழம் உலகிலேயே இதுவரை இருந்த ஆப்பிள் பலத்திலேயே சிறந்த ஆப்பிள், இதை பெற்றுகொள் என் அன்பு மகளே ” என்றார் ... அவள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தால்.. இந்த முறை ஆப்பிள் கீழே விழவில்லை.. அவள் ஆனந்தத்தில் திளைத்து பூமி வந்தாள் ..


அதாவது நீங்கள் உங்கள் 100% முழு முயற்சியையும் ஒரு செயலில் போட்டு அதன் பிறகும்  உங்களுக்கு தோல்வி வந்தால் துவள வேண்டாம் அது காலம் கடந்து சென்றால் வருந்த வேண்டாம் ... உங்களுக்காக கடவுள் மிக சிறந்ததை கொடுக்க காத்திருக்கிறார் .. பொறுமையுடன், முழு திறமையுடன் நம்பிக்கை தளராது  உங்கள் செயலை செய்து வாருங்கள் .. உங்கள் பொறுமை ஒருநாள் உங்களுக்கு அதன் பலனை தரும்..

By
P Renjith Kumar

Wednesday, March 16, 2011

Astrology and Marriage : Need a Change in our View

.
Astrology has very important place in india. It is believed be sacred one and around 60% seek suggestions from astrologers before doing any important task. Astrology is a mathematical model to calculate predictions based on the birth time and date. It has some scientific eveidence. But all those are only true if see very good and experienced astrologer. Today in india only 5% of astrologers are well experienced. So we fall into the 95% category of less experienced. This can be proved as inexperienced easily, bcos if you see five astrologers, five will say five different views.This has severe impact in your life, especially decision making in marriage.


"Too much of anything is good for nothing", This inexperienced astrologers are going to make our india down and they are obstacles for our nations growth.

What makes me feel bad is, Many educated parents also think that only astrology matching is the first criteira. Astro matching is important in case of ill effects of venus, thats all. But these days, astrologers in Marriage matching, tell different opinion,

Eg: if you give a pair of horoscope to one astrologer, he will say it is good and other astrologer will say it is bad. If i say 2+2 = 4, It must be same in india Or In US, Or any where in world that is the perfect system .If everyone is saying different opinion, is that really a mathematical model???

If you give a horoscope pair for matching to 10 astrologers 6 out of 10 will say the correct results( if it is matching or not matching) So 6 are correct and 4 persons are fake astrologers. Use your brain, be logical, so take the decision what major astrologers say. Many marriages are stopped bcos one astrologer will say it is not good, so the foolish parents will aggree to that one astroologer and they do not consult others for second opinion also, and loose a good Bride/Groom for this son or daughter. So take this steps give as first approach.


First see the character of the boy or girl. Character is the prime thing, bcos character is life, astrology will not tell character.

Understand what is your son or daughters character/likes/dislikes/wishes etc, in this way you can get to know of your daughter and the boy will make a good pair.

Check if the boy/girl suits for your boy/girl in other aspects like beauty, look, personality etc. Bcos i have see a beautiful girl married to an ugly man only because of astro matching, But finally what the ugly man get is inferior complex, so problems starts in their life.

See if there is match in education, I have seen mant Post graduate girls marrying Diplomo boys, so there will be ego problem when marriage life starts. Do not entertain this.

See if there is match in job (A doctor if married to a doctor will make a good pair, But only we need to see if both boy and girl are ok to marry based on job)

See if the taste of both are same

See if the likes of both are same


Very important, Call the boy/girl, Talk to him personally, Get to know what is his attitude, what is his view over life, what is his view towards marraige, do he value marriage life, do he respect elders, do he respects tradition, is he gree for money, is he workaholic, is he capable to taking care of his wife better? Then ask your doughter/son to speak with whom you have selected, Then you will come to know all info, in this way if a boy has impressed you, Kindly do not give importance to Astrology, Just see if there is any ill effects of mars, Thats all, Don't entertain the astrologer more, Else he will make you to miss a golded Groom.


Finally what we need is our son/daughter to be happy after marriage, it can happen only if both have very good attitude fundamentally, so find a boy/girl that who have good attitude and character, Throw away the practice of first seeing astrology and filtering boys and girls based on that, bcos if you filter like this you have you compromise on getting good character boy and girl, if you still follow the astrology first others next, no issues, finally you have to accept what ever the character the boy is as his astrology is matching.


I also want to say, many parents if they do not like a boy/girl based on status, work family issues etc, they simply say astrology is not matching, Bcos no one can deny that. But they could have come into this conclusion without meeting the boy/girl personaly, they conclude this without knowing about the boys character, i feel those parents are the one who are greed for money, all they want is money and US settled boy with good job for heir daughter, i dont ask to you give your daughter to a boy who is good in character but do not have job, that is not my point.but what is wrong is seeing a boy with good salary, but lives in india, But he has good character. So make the habbit of seeing character first, Job, Salary is must, But make that as second and third choice, but make sure that is also matching according to your girl.


Every thing has good and bad, I do not blame astrology, But do not become addict of it.

My advice is do not miss a good groom/bride, Just for the reason of astrology.

Do not spoil your children life by name of astrology. I do not blame astrology, But too much of anything is good for nothing.

Life is to live, not to compromise.

Sunday, August 1, 2010

“அமுதம் உண்டு விஷமும் உண்டு” - 2

.
2. நட்பு

ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.

நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .

நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு


நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784


நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து கொல்லவில்லை இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம். அதை பற்றி இப்போது பார்ப்போம்.


மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான்.  அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.


இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.


இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.


இன்று உலகின் தலை சிறந்த ERP software என்னும் அணைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த சாப்ட்வேர்ரை வடிவமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அணைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அணைத்து முன்னணி நிறுவனங்களை இயக்குவது SAP என்னும் மென்பொருள் தான்.


இந்தியாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது படிப்பு மற்றும் அயராத உழைப்பு காரணமாக முன்னேறிய ஒரு இளைஞன் தனது அலுவலகத்தில் தனை போல் சிந்திக்க கூடிய எழு நண்பர்களை அரவணைத்து அனைவரது உழைப்பாலும் முயற்சியாலும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினர் . அந்த நிறுவனம் இன்று உலக பிரசித்தி பெற்ற infosys நிறுவனம் ஆகும். கல்லூரியில் நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவ மனைவிக்கும் Infosys இன்போசிஸ் என்னும் நிறுவனத்திற்குள் நுழைவது ஒரு கனவாகும். இத்தகைய ஒரு சாதனை, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம கொண்ட ஏழு நண்பர்களால் முடிந்தது. இது தான் நட்பின் வலிமை.


இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787


நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.


பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும். அதாவது பத்தாம் வகுப்பு வரை மிக நன்றாக பள்ளியில் படித்த ஒரு மாணவன் புது பள்ளிக்கு செல்லும் பொது அங்கே புது நண்பர்கள் கிடைகின்றனர் அவர்களிடம் அந்த நல்ல மாணவன் நட்பு பாராட்டுகின்றான். அந்த நண்பர்கள் அவன் மிது ஏற்படுத்தும் தாக்கம் அவன் இரண்டு வருட பள்ளி படிப்பை நிர்ணயம் செய்கின்றது. அதாவது அதுவரை கல்வி மேல் நாட்டம் கொண்ட ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுதுபோக்கிலும் , திரைப்படத்திலும் நட்டம் ஏற்பட வைக்கிறது. அந்த வயதில் நட்பு மீது தான் அதிக மரியாதை இருக்கும் எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் விண்ணாகி விடும். ஒரு மருத்துவராகவோ  அல்லது பொறியாளராகவோ  வர வேண்டிய ஒரு மாணவனை கேடான நட்பு கடைசியில் மிக மோசமான நிலைமையில் கொண்டு சேர்த்து விடும்.


ஆனால் அதே நேரத்தில் நல்ல நண்பர்களை சேர்த்து கொண்டு அனைவரும் சேர்ந்து படித்து எல்லோரும் கருத்துகளையும், சந்தேகங்களையும் பரிமாறி படித்து மிக நல்ல மதிப்பெண் பெற்று மிக நல்ல கல்லூரியில் சேரும் பல நல்ல மாணவர்களை இப்போது நாம் பார்க்கலாம். அந்த காலத்து சில மோசமான சினிமாகளில் பள்ளி/கல்லூரி  என்றல் பொழுதுபோக்கும் இடம் போல கட்டி இருப்பார்கள் அதை பார்த்து கேட்டு போனவர்கள் சிலர் உண்டு ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. இருபினும் மாணவர்களே உங்கள் நண்பனை தேர்ந்து எடுக்கும் பொது கவனமாக இருங்கள், உங்கள் நல்ல உயர்ந்த லட்சியத்தை உக்க படுத்தும், அதற்கு துணை புரியும் ஒருவனை நண்பனாக தேர்ந்து எடுங்கள். உங்களை ஊர் சுற்ற வைத்து, மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமை அக்க வைக்கும் ஒருவனை மறந்தும் கூட  உங்கள் நண்பனாக அக்கி விடாதீர்கள்.


உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும்  பொது மட்டும் உடன் இராமல் நீங்கள் அழும பொது அறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்

"A real friend is one who walks in when the rest of the world walks out."

அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன்  ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.

அரிஸ்டாடில் என்னும் உலகின் சிறந்த கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா.

“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.

கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்

"My best friend is the one who brings out the best in me."

எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.

இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகேறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் பனி புரியும் சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள். இப்போது பல பெண்களும் தங்களுக்கு வரன் பார்க்கும் பொது சோசியல் ட்ரின்கர் என்றால் பரவையில்லை என்று குறும் அளவிற்கு நாம் ஆளாகி  உள்ளோம். ஆனால் பாவம் அந்த பெண்கள் ஒரு முறை குடித்தாலும் நூறு முறை குடித்தாலும் அவன் குடிகாரன் தான் என்பதை உணர மறுக்கின்றனர். நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.


மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.


மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு கட் அடித்து எப்போது ஊர் சுற்றும் மாணவர்களும், நட்பு என்ற பெயரில் ஆபாச நடனம் மற்றும் கும்மாளம் போடும் ஹோட்டல் மற்றும் பப்களிலும் நீங்கள் தாரளமாக பார்க்கலாம். இவர்கள் அனைவரும் வாழ்கையில் நட்பினால் கெட்டு  போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.


மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை  யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம்  விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பகு படுத்துங்கள்.


இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படு வருபது வருத்தம் தருகின்றது. ஒரு கட்சியில் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு அரசியில்வாதி அடுத்த கட்சி சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனை கட்சிக்காக இழிவாக மேடையில் பேசுகிறான். ஆக அவன் கட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று பதவிக்காக, பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் துகி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். அக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நேரிய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.


உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.


எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தொல் கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .


கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பாரில் ஸ்காட்ச் அடிக்க உதபுவனும், பப்பில் ஆட்டம் போட்டு ஒடுபவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.

உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.

நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .

தொடரும் ....

Thursday, July 15, 2010

“அமுதம் உண்டு விஷமும் உண்டு” - 1

.
1.அன்பு


நாம் எந்த அற நூலை படித்தாலும் அதில் நிச்சயம் அன்பை பற்றி மிக விரிவாக சொல்லிஇருப்பார்கள். அன்பு செலுத்துங்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை வெறுப்பவர்கள் மீதும் நீங்கள் உங்கள் தன்னலமில்லாத அன்பை பொழியுங்கள் என்று கூறுவதை பார்க்கலாம். இது எல்லா இடத்திலும் சத்தியமா என்பது பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.


அன்பு என்பது மிக உயர்ந்த ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, அனால் இது நான் ஏற்கனவே சொல்லியது போல உயர்ந்த வேதாந்த தத்துவம் பேசும் நூல் இல்லை.அன்றாட வாழ்வில் நாம் எதை செய்ய முடியுமா அதை பற்றி மட்டும் தான் இதில் பார்க்க உள்ளோம்.

இயற்க்கை நமக்கு பல உணர்வுகளை கொடுக்கிறது உதாரணமாக அச்சம், கோபம், பாசம், அன்பு, இறக்கம் மற்றும் பல. இவைகளில் மிக உயர்ந்ததும் புனிதமானதும் அன்பு ஒன்று தான், அதனால் தான் ‘அன்பே சிவம்’ என்று கூறினார்கள்.

அனால் இயற்கை கொடுக்கும் அணைத்து உணர்வுகளையும் சரியான விகிதத்தில் உபயோக படுத்தாமல் இருபது உண்மையில் மனிதனின் ஒரு குறையே ஆகும்.எந்த உணர்வை எங்கு உபயோக படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட ஒருவனுக்கு தோல்விகள் சீக்கிரம் நெருங்காது.

அன்பு எல்லை மீறும் பொது வெறி ஆகின்றது. தனது மொழி, ஜாதி, இனம் மற்றும் மக்கள் மீது ஒருவன் கொண்டுள்ள அதிகபடியான அன்பு ஒரு கட்டத்தில் வெறியாக சென்று முடிகிறது. விளைவு அடுத்த மொழி, இனம் எல்லாம் வெறும் கிள்ளுகீரை என்று நினைக்க வைக்கிறது. இதன் காரணமாக அடுத்த மொழி அல்லது இன மக்களுக்கு தீய செயல்கள் அவனிடம் இருந் உருவாகிறது. இப்போது அவ்வாறு இருக்கும் ஒரு மனிதனை சுற்றி இருக்கும் நல்லவர்கள் கூட்டம் தானாக விலகுகிறது. அவனிடம் மீதம் உள்ள கூட்டம் எல்லாம் அவன் பொருள், பதவி மாற்றும் சொத்தின் மீதும் அசை கொண்ட பேராசை கும்பலாகத்தான் இருக்கும். இன்று நம் நாட்டில் நடக்கும் மொழி ஜாதி சண்டைகளுக்கு அடிப்படை இது தான். எல்லாரும் நல்லவர்களே அனால் அவர்கள் அன்பு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டும் இருக்கிறது. இந்த இடத்தில உண்மையான அறிவுடைய மனிதன் தனது அன்பின் எல்லையை சுருக்குவதில்லை. அவனுடைய இதயம் அணைத்து மொழி, ஜாதி, மற்றும் இனங்கள் மீதும் ஒரே அன்பை வைத்திருக்கின்றன. ஆனால் அவனுடைய மொழிக்கு கூடுதல் பாசம் அவ்வளவுதான், அனால் அவனுக்கு எதன் மீதும் வெறுப்பு இல்லை. இந்த கோணத்தில் பார்க்கும பொது நாம் நம் அன்பை குறைக்ககூடாது என்பது தெரிகிறது அனால் நாம் அன்பை குறைக்க வேண்டிய இடம் பல இருக்கின்றன அவற்றை பார்போம்.

பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்லும்போது ஒருவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கின்றனர் அவர்கள் மீது நமக்கு அன்பு அதிகம் இருக்கும். சிறிது காலத்திற்கு பின் நன்றாக பழக ஆரம்பித்த பின் வகுப்பில் உள்ள எல்லோரும் சேர்ந்து சுற்றுலா மற்றும் உல்லாச பயணம் செய்யும்பொது ஒரு நல்ல மாணவனின் நண்பன் மது அருந்தும் பழக்கம் கொண்டவனாக இருந்தால் அவன் அவனுடைய நண்பனையும் மது அருந்த சொல்வான் நாம் வேண்டாம் என்று முதலில் கூறினாலும் நம்மை ‘எனக்காக இது கூட செய்ய மாட்டியா ?” என்று அன்பு பொங்க கேட்பார்கள். இந்த சூழ்நிலையில் பல நல்ல மாணவர்கள் தங்கள் நண்பர் மீது வைத்துள்ள் அன்பு காரணமாக அவர்கள் சொல்வதை தட்ட முடியாமல் கெட்ட பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர். இப்போது தவறான நண்பன் உங்கள் மீது கோபப்படகூடாது என்று அவன் மீது காட்டும் உங்கள் அன்பு உங்களுக்கு கேடு விளைவிக்கிறது. இங்கே அன்பை கட்டு படுத்த உங்களுக்கு சரியாக தெரிய வேண்டும் இல்லை என்றல் உங்கள் வாழ்கை வழி தவறி சென்றுவிடும்.

நீங்கள் ஒருவரிடத்தில் நன்றாக பழகுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அவர் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறீர்கள்.அவருக்காக நீங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறீர்கள். இதற்கு முன்பு அவருக்காக பலதடவை உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் சொல்லைமீறி உதவி செய்திருக்கிறீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் உதவி உங்களுக்கு தேவைபடுகிறது, உங்களுக்கு நன்றாக தெரியும் அதை அவர் உங்களுக்கு செய்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று, அதனால் அவரிடம் நம்பிகை யோடு உதவி கேட்கிறீர்கள் ஆனால் அன்று அவர் உங்களை பொருட்படுத்த கூட இல்லை என்று வைத்து கொள்வோம் உங்களுக்கு எப்படி இருக்கும். இவ்வளவு நாட்கள் நீங்கள் செய்தது உங்களுக்கு முட்டாள் தனமாக தோன்றும், தோன்றா விட்டாலும் அப்போது அது தான் உண்மை நிலை. அவர் பார்வையில் உங்களை தான் சொன்னதை மட்டும் செய்யும் அடிமை போல உங்களை இவ்வளவு நாட்கள் நினைத்துள்ளார் என்பது அப்போது உங்களுக்கு தோன்றும். இனி மீண்டும் அவருக்காக உங்கள் பெற்றோர், மனைவி சொல்லை மீறி அன்பு செலுத்துவீர்கள் என்றால் அது மிக பெரிய மடமையே ஆகும். யாருக்கு உங்கள் அன்பு தேவை என்பதில் மிகத்தெளிவாக இருங்கள். உங்களை முட்டாள் ஆக்கும் நபர்களிடம் உங்கள் அன்பின் எல்லையை சுருக்குங்கள்.

நீங்கள் இதற்கு முன் நேராக கூட பார்த்திராத ஒரு மேடை பேச்சு தலைவனுக்காகவும் மற்றவருக்காகவும் நீங்கள் கொண்டிருக்கலாம் ஆனால் அவர் தவறு செய்யும்போது  அவரை செயலை விமர்சிக்கும் அனைவரையும் உதாசீனப்படுத்தாதிர்கள். கிராமங்களில் கட்சி வேலை செய்யும் பலர் கட்சிக்காக அன்பு செலுத்தவதாக நினைத்து பிற கட்சியில் இருக்கும் தன் அருமை நண்பர் மற்றும் உறவினர்களை பகைத்து கொள்வது இப்போது வாடிக்கையாக இருக்கிறது. கட்சிக்காக வேலை செய்யுங்கள் அனால் உங்களை உண்மையாக நேசிப்பவர்களை உதாசீனப்படுத்தாதிர்கள்.

அன்பு என்னும் பெயர் சொல்லி இப்போது பல ஏமாற்று வேலைகள் நடப்பதால் தான் நான் இதை முதலில் எழுத நான் தீர்மானித்தேன். இந்த விஷயத்தில் நமக்கு தெளிவு தேவை. எங்கு அன்பு காட்ட வேண்டும் எங்கு காட்ட கூடாது என்பதில் தெளிவு தேவை. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறும் மோசடி கும்பல் உங்கள் மீது முதலில் எவ்வளவு அன்பு பாராட்டுமோ அவ்வளவு அன்பு பாராட்டும், அனால் தக்க சமயத்தில் அவர்கள் உங்கள் பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிடும் பொது அவர்கள் உங்கள் மிது பொழிந்த அன்பு போலி என்பதை மனம் உணர சில நேரம் எடுத்தாலும் அது தான் நிஜம். இவ்வகையான போலி அன்பை தக்க சமயத்தில் அடையாளம் கண்டு கொள்ளா விட்டால் நாம் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

நான் மேலே கூறியதை வெளிநாட்டில் வேலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்காதிர்கள். உதாரணம் எப்போதும் பேசாத ஒரு உறவினர் தீடிர் என்று உங்கள் மீது அன்பு மழை பொழிகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அது உண்மையான தன்நலம் இல்லாத அன்பு என்றல் மிக நன்மையே. அனால் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி நீங்கள் போட வேண்டி உங்களை அப்போது மட்டும் சுற்றி வரும் அன்பு சுயநலம் கொண்டது. அவரிடம் உங்கள் அன்பை அளவுக்கு அதிகம் காட்டுவீர்கள் என்றால் நீங்கள் போலி அன்பிற்கு விலை போய்விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களை அவர் மீது அன்பு பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை அனால் அவரிடம் சிறிது எச்சிரிகை உணர்வோடு இருங்கள் அவ்வளவுதான். யாரையும் எதன் பொருட்டும் வெறுக்காதீர்கள், புரிந்து கொண்டு எச்சிரிகை உணர்வோடு இருக்க பழகுங்கள். இந்த ஒன்று தான் இன்றைய சூழ்நிலையில் மிக தேவையான ஒன்று.

ரயில் பயணத்தில் அன்பாய் பேசுவது போன்று நடித்து உங்கள் அன்பை பெற்று, பிறகு எதாவது உங்களுக்கு உன்ன கொடுத்து உங்களை மயக்கம் அடைய செய்து உங்கள் உடமைகளை பறித்து செல்லும் ஆசாமிகள் இன்று பெருகுவதற்கு காரணம் என்ன தெரியுமா?  "நம் அன்பின் பலவினம் தான்". தேவை இல்லாத இடத்தில் தேவையற்றவரிடம் நாம் காட்டும் அன்பு தான் இவ்வாறு மற்றவர் நம்மை ஏமாற்ற காரணம் ஆகிறது. எங்கும் எச்சிரிகை உணர்வோடு எல்லை வரை நடந்து கொண்டால் நீங்கள் பல இன்னல்களில் இருந்து தப்பலாம்.

உங்கள் இனம், மதம், ஜாதி என்பதற்காக ஒருவன் என்ன செய்தாலும் சேரி என்று ஏற்று கொள்ளும் அன்பு ஒரு கட்டத்தில் உங்களுக்கே கேடு விளைவிக்கும். இந்த இடத்தில் உங்கள் அன்பை குறைக்க வேண்டிய அவசியம் இன்றைய இந்தியாவிற்கு மிகவும் தேவை. ஒருவன் எவ்வளவு மோசமாணவாக இருந்தாலும் தேர்தலில் போட்டி இடும் பொது அவனது ஜாதி கண்டு வாக்களிக்கும் மக்கள் இப்போதும் பலர் உள்ளனர். உண்மையான நபருக்கு இப்படி ஜாதி வேற்றுமை காரணமாக தோல்வி ஏற்படும்போது வரும் காலத்தில் இதை காரணம் காட்டி பல நல்ல மனிதர்கள் தேர்தலில் போட்டி இடவே மாட்டார்கள். உங்கள் ஜாதி மீது நீங்கள் கொண்ட அளவு கடந்த அன்பு பிற்காலத்தில் நல்ல தலைவர்களை உருவாக்குவதை முற்றிலும் தடுக்கும்.

உண்மையான அன்பு என்றும் அக்க மட்டுமே செய்யும் எதையும் அழிக்காது. இந்த உலகத்தின் எல்லா உயிரினம் மீது அன்பு கொண்ட ஒருவன் சைவ நெறியை பின்பற்றுகிறான், அவன் பார்வையில் ‘ஜீவ காருண்யம்’ மட்டுமே இருக்கும். அவனுடைய தன்னலம் இல்ல அன்பு எந்த உயரினத்தையும் அழிக்காது. இது தான் அன்பின் வலிமை.


அனால் இப்போது தூய்மையான அன்பை காண்பது கடினமாக இருக்கிறது. அன்பின் பெயரால் பல ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. நாம் அதிலிருந்து நம்மை காத்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அதுவே நமக்கு கேடு விளைவிக்கும்.


உங்கள் அன்னை, தந்தை, சகோதர, சகோதிரிகள், தாத்தா, பாட்டி மீது எப்போதும் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடாதிர்கள். அவர்கள் தான் உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள். பல சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது சிறிது மனஸ்தாபங்கள் வரலாம் அனால் அவர்கள் உங்களுக்கு செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அவர்கள் மீது முன்பு இருந்தை விட அன்பை போலியுங்கள்.அவர்களிடம் எப்போதும் அன்பாக இருந்துவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமை என்பதை கண்கூடாக காண முடியும். அன்பின் அமுதத்தை உணரலாம்.


இதை தவிர்த்து அன்பு எங்கு நிறைவாக கட்ட வேண்டுமோ அங்கே காட்டுங்கள், உங்கள் அறிவை மற்றும் அனுபவத்தை கொண்டு எங்கு அன்பை குறைக்க வேண்டுமோ யாரிடம் குறைக்க வேண்டுமோ அங்கே குறையுங்கள். எல்லா இடத்திலும் அன்பை மட்டும் பொலிந்து கொண்டு இருந்தால் உங்களை இந்த உலகம் பிழைக்க தெரியாதவன் என்று சரியாக சொல்லிவிடும். உங்களை அன்பால் ஏமாற்ற பலர் முண்டி அடித்து கொண்டு வருவார்கள்.

ஒரு அழகிய ஆங்கில சொல் ஒன்றை பாருங்கள்


Don't let someone become a priority in your life...
When you are just an option for them...

அதாவது உங்களை பற்றி சிந்தித்துகூட பார்க்காத ஒருவரை உங்கள் வாழ்கையின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக அக விட்டு விடாதிர்கள்.

அன்பு வாழ்கையின் மிக உயர்ந்த பண்பு அதை எவ்வாறு உபயோக படுத்த வேண்டும் என்பதை எனுபவம் கற்று தரும். உண்மையான அன்பு என்றைக்குமே ஆக்கும் எதையும் அழிக்காது.

அக அன்பினால் நன்மையும் உண்டு; இடம், பொருள் அறியாது செய்யும் அன்பினால் தீமையும் உண்டு. ஒரு அழகிய தமிழ் சொல்லை நான் கேள்வி பட்டேன் அதை கடிபிடித்தால் அனைவர்க்கும் நலம் உண்டாகும். அது என்ன தெரியுமா

“அன்பாய் இருங்கள் ஆனால் அடிமை ஆகி விடாதீர்கள்”


ஆக சரியாய் புரிந்து கொண்டு செலுத்துகிற அன்பால் அமுதம் உண்டு. மடைமையல் இடம், பொருள் தெரியாமல் செலுத்துகிற அன்பால் விஷம் தான் உண்டு. உங்களுக்கு எது வேண்டும்?


அன்பினால் அமுதம் உண்டு விஷமும் உண்டு” .


தொடரும் . . .

Monday, July 12, 2010

“அமுதம் உண்டு விஷமும் உண்டு” - முன்னுரை

அமுதம் உண்டு விஷமும் உண்டு

முன்னுரை

“அமுதம் உண்டு விஷமும் உண்டு” என்ற இந்த தலைப்பு மிக கடினமான வேதாந்த தத்துவங்களை பற்றி பேச போவதில்லை. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளை மையமாக கொண்டது, எனவே இது ஒரு வாழ்வியல் படமாக கூட சிலருக்கு அமையும். இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்திலுமே நன்மை மற்றும் தீமை உள்ளது, நாம் எவ்வாறு அதை அணுகுகிறோம் என்பதை பொருத்து நன்மை மற்றும் தீமை விளைகிறது. அதன் அடிப்படியில் தான் இந்த தொடர் அமையும்.

தொடரும்..

Wednesday, June 23, 2010

The misteries of love-1

The misteries of love-1

Normally if you read many book on self motivation or philosoply you can see that it stress to pour our love even to the hatred.some suggest that we need to give our unconditional love to everyone and many books say that if your love is so pure to anyone then you do not expect anything from them. Let us validate if these things are practically feasible.

I accept that love is great and when it is shown to anyone it creates wonders.But we need to know when to show love and when to stop loving because if this is not understood correctly then you may land up in trouble.

You should not stop loving your parents,brothers,sisters because they are the reson for your todays stage. Some time you may get anger on their actions or the way they behave, but remember your parents are living for you, so at any stage do not stop loving them. This area you need to be clear.

Now comming to the most important part. Is unconditional love really possible

Read this carefully

You are going to a college and you got friends there, normally you have lots of love towards your friends of your school/college. During course of time you may go to any picnic/party etc, there your beloved friend may complell you to take liquor out of love and during that time 50% of innocent students do not know what to say. If they say no his friend will tell 'Common da, if your are my friend drink now..' . So the love for your friend makes you to drink liquor now the great love turned to be a poison for you. This sort of love makes your life to lose. So in that situation tell to your friend like this.

"Hi friend, I really love to be with you, i am your friend indeed, but that dosent mean that i have to do whatevey you say, then it means that i am slave to you. The real friendship understand ones feeling and it supports for that.So if you are a real friend of mine, kindly do not compel to take liquor.and from my part as i am real friend i beg you also not to follow this bad habbit, but i wont force you. It is upto you to decide. "

So in this way you can be a good student in college, this will not make you to lose your friends and at the same time will prevent you from being spoiled in  the name of love.

To be continued.....
.

Thursday, February 18, 2010

Dedication towards work.

An elderly carpenter was ready to retire. He told his employer-contractor of his plans to leave the house-building business to live a more leisurely life with his wife and enjoy his extended family. He would miss the paycheck each week, but he wanted to retire. They could get by.

The contractor was sorry to see his good worker go & asked if he could build just one more house as a personal favor. The carpenter said yes, but over time it was easy to see that his heart was not in his work. He resorted to shoddy workmanship and used inferior materials. It was an unfortunate way to end a dedicated career.

When the carpenter finished his work, his employer came to inspect the house. Then he handed the front-door key to the carpenter and said, "This is your house... my gift to you."

The carpenter was shocked!

What a shame! If he had only known he was building his own house, he would have done it all so differently.

So it is with us. We build our lives, a day at a time, often putting less than our best into the building. Then, with a shock, we realize we have to live in the house we have built. If we could do it over, we would do it much differently.

But, you cannot go back. You are the carpenter, and every day you hammer a nail, place a board, or erect a wall. Someone once said, "Life is a do-it-yourself project." Your attitude, and the choices you make today, help build the "house" you will live in tomorrow. Therefore, Build wisely!

Monday, February 15, 2010

What is Excellence ?

A man once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage"

The gentleman examined the idol and found no apparent damage. "Where is the damage?" he asked.

"There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work.

"Where are you going to install the idol?"

The sculptor replied that it would be installed on a pillar twenty feet high.

"If the idol is that far, who is going to know that there is a scratch on the nose?" the gentleman asked.

The sculptor stopped his work, looked up at the gentleman, smiled and said, "I will know it."

The drive from within to excel irrespective of whether someone appreciates or not is called "Excellence".
.

Wednesday, February 10, 2010

வாழ்வியல் தத்துவங்கள்

கவிதையில் அன்பை பற்றி கூறுவதை விட, நிஜ வாழ்கையில் அன்பாய் இருங்கள் , உங்கள் வாழ்க்கையே ஒரு அழகிய கவிதை போல் ஆகிவிடும்

Monday, February 1, 2010

Morals - 1 CARROT, EGG OR COFFEE

CARROT, EGG OR COFFEE

A daughter complained to her father about life and how hard things are for her. She said she wanted to give up as she was tired of struggling. For just as one problem was solved, another arose.

Her father, a chef, took her to the kitchen, filled three pots with water and placed the fire on high.

Soon the three pots came to a boil. In one he placed carrots, in the other he placed eggs and in the last he placed ground coffee beans. He let them sit and boil, without saying a word. The daughter wondered what he was trying to do.

In half an hour he turned down the fire and took out the contents of the pots and put them in bowls. Turning to her he said, “My dear child, what do you see?” Smartly she replied, “Carrots, eggs and coffee.”

He brought her closer and asked her to feel the carrots. She did and noted that they were soft. He then asked her to take an egg and break it. After shelling it, she observed it was hard-boiled now. Finally, he asked her to take a sip of the fragrant coffee. She winced as it was very strong.

Humbly, she asked, “What does it mean father?” He explained, “Each of them faced the same adversity, 100oC of boiling water. However, each reacted differently. The carrot was strong, hard and unrelenting. But, after going through boiling water, it softened and became weak. The egg was fragile. A thin outer shell protected a liquid centre. But after sitting in the boiling water, the inside became hardened. However, the coffee beans are unique. After they were in the boiling water, they became stronger and richer. Which one of these are you?” he asked.

Are you the carrot that seems hard but with the smallest amount of pain, adversity or heat, you wilt and become soft with no strength? Are you the egg, which starts off with a malleable heart? But after a death, breakup, divorce or layoff become hardened and stiff? Your shell looks the same but you are bitter and tough inside. Or are you like the coffee bean? The bean does not get its true flavour until it reaches 100oC. When the water gets hotter, it just tastes better. When things are at their worst, you get better.

So how do you handle adversity? Are you a carrot, an egg or a coffee bean?