.
1.அன்பு
நாம் எந்த அற நூலை படித்தாலும் அதில் நிச்சயம் அன்பை பற்றி மிக விரிவாக சொல்லிஇருப்பார்கள். அன்பு செலுத்துங்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை வெறுப்பவர்கள் மீதும் நீங்கள் உங்கள் தன்னலமில்லாத அன்பை பொழியுங்கள் என்று கூறுவதை பார்க்கலாம். இது எல்லா இடத்திலும் சத்தியமா என்பது பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
அன்பு என்பது மிக உயர்ந்த ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, அனால் இது நான் ஏற்கனவே சொல்லியது போல உயர்ந்த வேதாந்த தத்துவம் பேசும் நூல் இல்லை.அன்றாட வாழ்வில் நாம் எதை செய்ய முடியுமா அதை பற்றி மட்டும் தான் இதில் பார்க்க உள்ளோம்.
இயற்க்கை நமக்கு பல உணர்வுகளை கொடுக்கிறது உதாரணமாக அச்சம், கோபம், பாசம், அன்பு, இறக்கம் மற்றும் பல. இவைகளில் மிக உயர்ந்ததும் புனிதமானதும் அன்பு ஒன்று தான், அதனால் தான் ‘அன்பே சிவம்’ என்று கூறினார்கள்.
அனால் இயற்கை கொடுக்கும் அணைத்து உணர்வுகளையும் சரியான விகிதத்தில் உபயோக படுத்தாமல் இருபது உண்மையில் மனிதனின் ஒரு குறையே ஆகும்.எந்த உணர்வை எங்கு உபயோக படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட ஒருவனுக்கு தோல்விகள் சீக்கிரம் நெருங்காது.
அன்பு எல்லை மீறும் பொது வெறி ஆகின்றது. தனது மொழி, ஜாதி, இனம் மற்றும் மக்கள் மீது ஒருவன் கொண்டுள்ள அதிகபடியான அன்பு ஒரு கட்டத்தில் வெறியாக சென்று முடிகிறது. விளைவு அடுத்த மொழி, இனம் எல்லாம் வெறும் கிள்ளுகீரை என்று நினைக்க வைக்கிறது. இதன் காரணமாக அடுத்த மொழி அல்லது இன மக்களுக்கு தீய செயல்கள் அவனிடம் இருந் உருவாகிறது. இப்போது அவ்வாறு இருக்கும் ஒரு மனிதனை சுற்றி இருக்கும் நல்லவர்கள் கூட்டம் தானாக விலகுகிறது. அவனிடம் மீதம் உள்ள கூட்டம் எல்லாம் அவன் பொருள், பதவி மாற்றும் சொத்தின் மீதும் அசை கொண்ட பேராசை கும்பலாகத்தான் இருக்கும். இன்று நம் நாட்டில் நடக்கும் மொழி ஜாதி சண்டைகளுக்கு அடிப்படை இது தான். எல்லாரும் நல்லவர்களே அனால் அவர்கள் அன்பு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டும் இருக்கிறது. இந்த இடத்தில உண்மையான அறிவுடைய மனிதன் தனது அன்பின் எல்லையை சுருக்குவதில்லை. அவனுடைய இதயம் அணைத்து மொழி, ஜாதி, மற்றும் இனங்கள் மீதும் ஒரே அன்பை வைத்திருக்கின்றன. ஆனால் அவனுடைய மொழிக்கு கூடுதல் பாசம் அவ்வளவுதான், அனால் அவனுக்கு எதன் மீதும் வெறுப்பு இல்லை. இந்த கோணத்தில் பார்க்கும பொது நாம் நம் அன்பை குறைக்ககூடாது என்பது தெரிகிறது அனால் நாம் அன்பை குறைக்க வேண்டிய இடம் பல இருக்கின்றன அவற்றை பார்போம்.
பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்லும்போது ஒருவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கின்றனர் அவர்கள் மீது நமக்கு அன்பு அதிகம் இருக்கும். சிறிது காலத்திற்கு பின் நன்றாக பழக ஆரம்பித்த பின் வகுப்பில் உள்ள எல்லோரும் சேர்ந்து சுற்றுலா மற்றும் உல்லாச பயணம் செய்யும்பொது ஒரு நல்ல மாணவனின் நண்பன் மது அருந்தும் பழக்கம் கொண்டவனாக இருந்தால் அவன் அவனுடைய நண்பனையும் மது அருந்த சொல்வான் நாம் வேண்டாம் என்று முதலில் கூறினாலும் நம்மை ‘எனக்காக இது கூட செய்ய மாட்டியா ?” என்று அன்பு பொங்க கேட்பார்கள். இந்த சூழ்நிலையில் பல நல்ல மாணவர்கள் தங்கள் நண்பர் மீது வைத்துள்ள் அன்பு காரணமாக அவர்கள் சொல்வதை தட்ட முடியாமல் கெட்ட பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர். இப்போது தவறான நண்பன் உங்கள் மீது கோபப்படகூடாது என்று அவன் மீது காட்டும் உங்கள் அன்பு உங்களுக்கு கேடு விளைவிக்கிறது. இங்கே அன்பை கட்டு படுத்த உங்களுக்கு சரியாக தெரிய வேண்டும் இல்லை என்றல் உங்கள் வாழ்கை வழி தவறி சென்றுவிடும்.
நீங்கள் ஒருவரிடத்தில் நன்றாக பழகுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அவர் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறீர்கள்.அவருக்காக நீங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறீர்கள். இதற்கு முன்பு அவருக்காக பலதடவை உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் சொல்லைமீறி உதவி செய்திருக்கிறீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் உதவி உங்களுக்கு தேவைபடுகிறது, உங்களுக்கு நன்றாக தெரியும் அதை அவர் உங்களுக்கு செய்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று, அதனால் அவரிடம் நம்பிகை யோடு உதவி கேட்கிறீர்கள் ஆனால் அன்று அவர் உங்களை பொருட்படுத்த கூட இல்லை என்று வைத்து கொள்வோம் உங்களுக்கு எப்படி இருக்கும். இவ்வளவு நாட்கள் நீங்கள் செய்தது உங்களுக்கு முட்டாள் தனமாக தோன்றும், தோன்றா விட்டாலும் அப்போது அது தான் உண்மை நிலை. அவர் பார்வையில் உங்களை தான் சொன்னதை மட்டும் செய்யும் அடிமை போல உங்களை இவ்வளவு நாட்கள் நினைத்துள்ளார் என்பது அப்போது உங்களுக்கு தோன்றும். இனி மீண்டும் அவருக்காக உங்கள் பெற்றோர், மனைவி சொல்லை மீறி அன்பு செலுத்துவீர்கள் என்றால் அது மிக பெரிய மடமையே ஆகும். யாருக்கு உங்கள் அன்பு தேவை என்பதில் மிகத்தெளிவாக இருங்கள். உங்களை முட்டாள் ஆக்கும் நபர்களிடம் உங்கள் அன்பின் எல்லையை சுருக்குங்கள்.
நீங்கள் இதற்கு முன் நேராக கூட பார்த்திராத ஒரு மேடை பேச்சு தலைவனுக்காகவும் மற்றவருக்காகவும் நீங்கள் கொண்டிருக்கலாம் ஆனால் அவர் தவறு செய்யும்போது அவரை செயலை விமர்சிக்கும் அனைவரையும் உதாசீனப்படுத்தாதிர்கள். கிராமங்களில் கட்சி வேலை செய்யும் பலர் கட்சிக்காக அன்பு செலுத்தவதாக நினைத்து பிற கட்சியில் இருக்கும் தன் அருமை நண்பர் மற்றும் உறவினர்களை பகைத்து கொள்வது இப்போது வாடிக்கையாக இருக்கிறது. கட்சிக்காக வேலை செய்யுங்கள் அனால் உங்களை உண்மையாக நேசிப்பவர்களை உதாசீனப்படுத்தாதிர்கள்.
அன்பு என்னும் பெயர் சொல்லி இப்போது பல ஏமாற்று வேலைகள் நடப்பதால் தான் நான் இதை முதலில் எழுத நான் தீர்மானித்தேன். இந்த விஷயத்தில் நமக்கு தெளிவு தேவை. எங்கு அன்பு காட்ட வேண்டும் எங்கு காட்ட கூடாது என்பதில் தெளிவு தேவை. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறும் மோசடி கும்பல் உங்கள் மீது முதலில் எவ்வளவு அன்பு பாராட்டுமோ அவ்வளவு அன்பு பாராட்டும், அனால் தக்க சமயத்தில் அவர்கள் உங்கள் பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிடும் பொது அவர்கள் உங்கள் மிது பொழிந்த அன்பு போலி என்பதை மனம் உணர சில நேரம் எடுத்தாலும் அது தான் நிஜம். இவ்வகையான போலி அன்பை தக்க சமயத்தில் அடையாளம் கண்டு கொள்ளா விட்டால் நாம் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
நான் மேலே கூறியதை வெளிநாட்டில் வேலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்காதிர்கள். உதாரணம் எப்போதும் பேசாத ஒரு உறவினர் தீடிர் என்று உங்கள் மீது அன்பு மழை பொழிகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அது உண்மையான தன்நலம் இல்லாத அன்பு என்றல் மிக நன்மையே. அனால் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி நீங்கள் போட வேண்டி உங்களை அப்போது மட்டும் சுற்றி வரும் அன்பு சுயநலம் கொண்டது. அவரிடம் உங்கள் அன்பை அளவுக்கு அதிகம் காட்டுவீர்கள் என்றால் நீங்கள் போலி அன்பிற்கு விலை போய்விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களை அவர் மீது அன்பு பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை அனால் அவரிடம் சிறிது எச்சிரிகை உணர்வோடு இருங்கள் அவ்வளவுதான். யாரையும் எதன் பொருட்டும் வெறுக்காதீர்கள், புரிந்து கொண்டு எச்சிரிகை உணர்வோடு இருக்க பழகுங்கள். இந்த ஒன்று தான் இன்றைய சூழ்நிலையில் மிக தேவையான ஒன்று.
ரயில் பயணத்தில் அன்பாய் பேசுவது போன்று நடித்து உங்கள் அன்பை பெற்று, பிறகு எதாவது உங்களுக்கு உன்ன கொடுத்து உங்களை மயக்கம் அடைய செய்து உங்கள் உடமைகளை பறித்து செல்லும் ஆசாமிகள் இன்று பெருகுவதற்கு காரணம் என்ன தெரியுமா? "நம் அன்பின் பலவினம் தான்". தேவை இல்லாத இடத்தில் தேவையற்றவரிடம் நாம் காட்டும் அன்பு தான் இவ்வாறு மற்றவர் நம்மை ஏமாற்ற காரணம் ஆகிறது. எங்கும் எச்சிரிகை உணர்வோடு எல்லை வரை நடந்து கொண்டால் நீங்கள் பல இன்னல்களில் இருந்து தப்பலாம்.
உங்கள் இனம், மதம், ஜாதி என்பதற்காக ஒருவன் என்ன செய்தாலும் சேரி என்று ஏற்று கொள்ளும் அன்பு ஒரு கட்டத்தில் உங்களுக்கே கேடு விளைவிக்கும். இந்த இடத்தில் உங்கள் அன்பை குறைக்க வேண்டிய அவசியம் இன்றைய இந்தியாவிற்கு மிகவும் தேவை. ஒருவன் எவ்வளவு மோசமாணவாக இருந்தாலும் தேர்தலில் போட்டி இடும் பொது அவனது ஜாதி கண்டு வாக்களிக்கும் மக்கள் இப்போதும் பலர் உள்ளனர். உண்மையான நபருக்கு இப்படி ஜாதி வேற்றுமை காரணமாக தோல்வி ஏற்படும்போது வரும் காலத்தில் இதை காரணம் காட்டி பல நல்ல மனிதர்கள் தேர்தலில் போட்டி இடவே மாட்டார்கள். உங்கள் ஜாதி மீது நீங்கள் கொண்ட அளவு கடந்த அன்பு பிற்காலத்தில் நல்ல தலைவர்களை உருவாக்குவதை முற்றிலும் தடுக்கும்.
உண்மையான அன்பு என்றும் அக்க மட்டுமே செய்யும் எதையும் அழிக்காது. இந்த உலகத்தின் எல்லா உயிரினம் மீது அன்பு கொண்ட ஒருவன் சைவ நெறியை பின்பற்றுகிறான், அவன் பார்வையில் ‘ஜீவ காருண்யம்’ மட்டுமே இருக்கும். அவனுடைய தன்னலம் இல்ல அன்பு எந்த உயரினத்தையும் அழிக்காது. இது தான் அன்பின் வலிமை.
அனால் இப்போது தூய்மையான அன்பை காண்பது கடினமாக இருக்கிறது. அன்பின் பெயரால் பல ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. நாம் அதிலிருந்து நம்மை காத்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அதுவே நமக்கு கேடு விளைவிக்கும்.
உங்கள் அன்னை, தந்தை, சகோதர, சகோதிரிகள், தாத்தா, பாட்டி மீது எப்போதும் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடாதிர்கள். அவர்கள் தான் உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள். பல சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது சிறிது மனஸ்தாபங்கள் வரலாம் அனால் அவர்கள் உங்களுக்கு செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அவர்கள் மீது முன்பு இருந்தை விட அன்பை போலியுங்கள்.அவர்களிடம் எப்போதும் அன்பாக இருந்துவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமை என்பதை கண்கூடாக காண முடியும். அன்பின் அமுதத்தை உணரலாம்.
இதை தவிர்த்து அன்பு எங்கு நிறைவாக கட்ட வேண்டுமோ அங்கே காட்டுங்கள், உங்கள் அறிவை மற்றும் அனுபவத்தை கொண்டு எங்கு அன்பை குறைக்க வேண்டுமோ யாரிடம் குறைக்க வேண்டுமோ அங்கே குறையுங்கள். எல்லா இடத்திலும் அன்பை மட்டும் பொலிந்து கொண்டு இருந்தால் உங்களை இந்த உலகம் பிழைக்க தெரியாதவன் என்று சரியாக சொல்லிவிடும். உங்களை அன்பால் ஏமாற்ற பலர் முண்டி அடித்து கொண்டு வருவார்கள்.
ஒரு அழகிய ஆங்கில சொல் ஒன்றை பாருங்கள்
Don't let someone become a priority in your life...
When you are just an option for them...
அதாவது உங்களை பற்றி சிந்தித்துகூட பார்க்காத ஒருவரை உங்கள் வாழ்கையின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக அக விட்டு விடாதிர்கள்.
அன்பு வாழ்கையின் மிக உயர்ந்த பண்பு அதை எவ்வாறு உபயோக படுத்த வேண்டும் என்பதை எனுபவம் கற்று தரும். உண்மையான அன்பு என்றைக்குமே ஆக்கும் எதையும் அழிக்காது.
அக அன்பினால் நன்மையும் உண்டு; இடம், பொருள் அறியாது செய்யும் அன்பினால் தீமையும் உண்டு. ஒரு அழகிய தமிழ் சொல்லை நான் கேள்வி பட்டேன் அதை கடிபிடித்தால் அனைவர்க்கும் நலம் உண்டாகும். அது என்ன தெரியுமா
“அன்பாய் இருங்கள் ஆனால் அடிமை ஆகி விடாதீர்கள்”
ஆக சரியாய் புரிந்து கொண்டு செலுத்துகிற அன்பால் அமுதம் உண்டு. மடைமையல் இடம், பொருள் தெரியாமல் செலுத்துகிற அன்பால் விஷம் தான் உண்டு. உங்களுக்கு எது வேண்டும்?
அன்பினால் “அமுதம் உண்டு விஷமும் உண்டு” .
தொடரும் . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment