ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ராமாயணம் தெளிவாக உணர்த்துகிறது . கடவுள் மனிதனாக பிறந்து , ஒரு மனிதன் என்றால் எப்பிடி இருக்க வேண்டும் , ஒரு குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் , ஒரு தகப்பன் எப்பிடி இருக்க வேண்டும் , ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் , ஒரு சகோதரன் எப்படி இருக்க வேண்டும் . ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் . குடிமக்கள் எப்பிடி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் எடுத்து சொல்வதற்காக உருவான அவதாரம் . ஒழுக்கத்தின் விளக்கம் என்ன என்று என்னை கேட்டால் , ஒரே சொல்லில் "ராமன்" என்று கூறி விடுவேன் , காரணம் ராமன் தான் ஒழுக்கம் பற்றிய ஒரு இலக்கணத்தை உலகிற்கு கொடுத்தார் . அந்த ராமனின் சரித்திரத்தை சொல்லும் ராமாயணத்தை பற்றிய " தத்துவ , விஞ்ஞான , வாழ்வியல் " கருத்துக்களை நான் இந்த பகுதியில் சொல்ல போகிறேன் . ஸ்ரீ ராமனுடைய அருளால் இதை துவங்குகிறேன் .
ஸ்ரீ ராம ஜெயம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment