ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20
பொருள்:
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்
அதாவது சிவனை வணங்குவதற்கு கூட சிவனது அருள் வேண்டும். எல்லோரும் சிவபக்தர்கள் எளிதில் ஆகி விட முடியாது என்பதை இந்த திருவாசகம் அருமையாக விளக்குகிறது.
என்னவே நாம் எல்லோரும் சிவனது அருளை பெற சிவனை வணங்குவோமாக
திருசிற்றம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment