Sunday, March 7, 2010

Why be a Vegetarian - 4

Thirukural in tamil

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? 251


தன் உடலை வளர்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கி கொள்பவர் எப்படி
கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும்


பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252


பொருளை பேணி காதிடதவர்க்கு பொருள் உடையவர் எனும் சிறப்பு இல்லை ;
புலால் உண்பவற்கு அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253


படை கருவியை பயன் படுத்துவோர் நெஞ்சமும், ஒரு உயிரின் உடலை
சுவைத்து உண்பவர் நெஞ்சமும் அருளுடமையை போற்ற கூடியவை அல்ல.


அருளல்ல யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். 254


கொல்லாமை அருளுடைமை ஆகும் ; கொல்லுதல் அருளற்ற செயலாகும் .
எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255


உயிர்களை உணவாக்கி கொள்ள சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள்
இருப்பதால் பல உயிர்கள் கொல்லபடாமல் வாழ்கின்றன


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256


புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களை கொல்லதிருபின், புலால் விற்பனை செய்யும்
தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள்.


உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 257


புலால் என்பது வேறொரு உயிரின் உடற்புன் என்பதை உணர்ந்தோர்
அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258


மாசற்ற மதி உடையோர் , ஒரு உயிரை பிரித்து அதன் ஊனை உன்ன மாட்டார்கள்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259


நெய் போன்ற பொருட்களை தீயில்இட்டு ஆயிரம் வேள்விகள் நடத்துவதைவிட
உண்பதற்காக ஓர் உயிரை போக்காமல் இருப்பது நல்லது


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260


புலால் உன்னதவர்களையும் அதற்காக உயிர்களை கொல்லதவர்களையும்
எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்

To be continued..


.

No comments: