Friday, April 8, 2011

"அதுவும் முழுமை, இதுவும் முழுமை" - ஈஸாவாஸ்ய உபனிஷதம்

.
"ஒளிக்கு அப்பால் ????"


"ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?" என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை கொடுக்கிறது இந்த உபநிஷதம்.

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் அதாவது "இங்கு இருபது அணைத்துமே கடவுள்" என்ற தத்துவத்தை சொல்லி மந்திரத்துடன் இது ஆரம்பிக்கும் . அதனால் தான் இதற்கு ஈசாவாஷ்ய உபசிஷதம் என்று பெயர் வந்தது.

இந்த உபநிஷதம் பதினெட்டு மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும். யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.சுக்ல யஜுர் வேதத்தில் வாஜஸனேய ஸம்ஹிதையின் நாற்பது அத்யாயங்களில் கடைசி அத்யாயம் இது.

ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதனை அறிய முற்பட்ட முனிவர் ‘அந்தப் பொருள் நானே’ என்ற அனுபூதியினைப் பெற்றார்.

மிக மிக முக்கியமாக இதில் பிரபஞ்சத்தின் ரகசியம் சொல்ல பட்டிருக்கிறது, இன்று நாம் காணும் குவான்டம் பிசிக்ஸ் (quantum physics), மற்றும் பார்ட்டிக்கில் பிசிக்ஸ் (particle physics) சொல்லும் பிரபஞ்ச தத்துவத்தை கீல் வரும் சுலோகம் சொல்கிறது.


"ஓம் பூர்ணம் அத, பூர்ணம் இதம்
  பூர்னத் பூர்ணம் உட்ச்யதே
  புர்ணஷ்ய பூர்ணம் அதைய
  பூர்ணம் ஏவவசிஷ்டயே"

அதாவது இதன் பொருள் என்ன வென்றால்..

"அதுவும் முழுமை, அதிலிருந்து வெளிப்பட்ட இதுவும் முழுமை,
முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்ட பின் முழுமையே எஞ்சி  நிற்கிறது ."

இதை படிக்கும் பொது நிச்சயம் குழப்பம் வரும், ஆனால், இது தான் இந்த அண்டத்தின் ரகசியம் , இன்னும் கோடி வருடம் கழித்து ஐன்ஸ்டீன் சொன்னது போல "Theory of Everything" நம்மால் உருவாக்க முடிந்தால் அது இந்த உபநிஷதம் சொன்ன கோட்பாட்டை நிரூபிக்கும்.

குறிப்பு:
இந்த தத்துவத்தை வைத்து நான் ஒரு புத்தகத்தை தமிழில் எழுதி உள்ளேன் அதற்கு பெயர்
 "பிரபஞ்ச விஞ்ஞானமும் இந்திய வேதாந்தமும் " ,
அது விரைவில் வெளி வர இருக்கிறது. அறிவியல் மற்றும் ஆன்மிகம் கலந்த ஒரு புத்தகம் அது.


இப்படிக்கு
பா.ரஞ்சித் குமார்

No comments: