Sunday, May 12, 2013

அன்னையர் தினம் - நான் கற்றது

.
இன்று (12/5/2013) அன்னையர் தினம்

அனைவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.


என் வாழ்வில் ஏறக்குறைய நேர்மையை நான் கற்றுகொண்டது என் அன்னையிடம் தான், நிறைய நிறைய தருணங்கள் உண்டு அனால் சமீபத்தில் நடந்த ஒன்றை கூறுகிறேன்.

எனக்கு சில வாரங்களுக்கு முன்பு அறிவு பல் முளைத்தால் அதை எடுக்க பல் மருத்துவமனைக்கு செல்ல என் பெற்றோரும் வந்தனர். மருத்துவமனைக்கு என் அன்னையை கூப்பிட்டு பல் எடுத்து திரும்ப வரும்போது ஆட்டோ ஒன்றில் வந்தோம். வண்டி நின்றபின் ஐம்பது ருபாய் ஆட்டோ ஓட்டுனர் கேட்டார். அப்போது ஐம்பது ருபாய் கொடுத்த என் அன்னை அந்த ருபாய் சிறிது கிழிந்து இருந்ததை கொடுத்த பின்பு தான் பார்த்தார், அதை ஆட்டோ ஓட்டுனர் சரியாக கவனிக்கவில்லை. உடனே அவரிடம் அய்யா அந்த ருபாய் நூறு கிழிந்து உள்ளது எனவே அதை கொடுங்கள் வேரு ஒரு ஐம்பது ருபாய் நோட்டு தருகிறேன் என்றார். அவரும் அப்போது தான் அதை நன்றாக பார்த்தார், பிறகு என் அன்னையை பார்த்து பரவில்லை, பிரச்சனையில்லை இது கூட செல்லும் என்று நன்றி சொன்னார்.


நான் கற்றது

நேர்மை என்னும் ஒன்றை அன்று இன்னும் நிறைய கற்றேன். அந்த ஐம்பது ரூம்பாய் நோட்டை ஆட்டோ ஓட்டுனர் கவனிக்காவிட்டலும், அதில் குறை இருந்தும் உடனே மனசாட்சிக்கு உட்பட்டு அவரிடம் இல்லை அதை திரும்ப கொடுங்கள் என்று நேர்மையை சொல்லி அவரே இல்லை இது செல்லும் என்று சொன்ன உடன் சரி என்ற அந்த நேர்மை குணம் என்னை சமிபத்தில் கவர்ந்தது.


நான் இனி வாழ்வில் எவ்வளவவு பெரிய நிலைமை சென்றாலும் இந்த பாடம் எனக்கு துணை வரும், அதாவது அடுத்தவருக்கு தெரிய வில்லை என்றாலும் நம் மனதுக்கு தப்பு என்று தெரிந்தால் அவருக்கு அந்த தவறான செயலை செய்ய கூடாது.

அனைவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.


நன்றி

பி ரஞ்சித் குமார்

No comments: