யோனி பொருத்தம் - உண்மை விளக்கம் .
இன்று பல நுனிப்புல் மேயும் போலி ஜோதிடர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் அபலை பெற்றோர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது.
பல படித்த பெற்றோர்களை நான் பார்த்துள்ளேன், அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் இருந்தாலும் கூட பள்ளிக்கூடம் கூட எட்டி பார்க்காத ஒரு ஜோதிடர் சொல்லுவதை கேட்டு வேத வாக்காக எடுத்து விடுகின்றனர் நல்ல வரனை தட்டி களிக்கின்றனர் .
அதே சமயம் படிக்காமல் இருக்கும் பலர் ஜோதிடம் எனக்கு முக்கியம் இல்லை என் மகன் அல்லது மகள் சந்தோஷம் தான் முக்கியம் என்று உதறி தள்ளும் படிக்காத மேதைகளும் உண்டு.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
இன்று திருமண பொருத்தம் பார்க்கும் பொது யோனி பொருத்தம் என்ற ஒன்று இல்லை என்றால் , ஜாதகம் சரிஇல்லை வேண்டாம் என்று சொல்லும் பல மூட ஜோதிடர்கள் உண்டு அதை நம்பி பல நல்ல சம்பந்தத்தை இழக்கும் அப்பாவி பெற்றோகளும் உண்டு.அவர்களுக்கவே இந்த பதிவு.
ஜோதிர்களை திருத்த முடியாது அது அவர்கள் பிழைப்பு (ஏமாற்றுபவர்கள் எபோதுமே உலகத்தில் உள்ளனர்) .... ஆனால் நாம் உண்ணாமையை ஆராயலாம்... அதற்கு நாம் சில நூறு வருடம் பின் சென்று பார்க்க வேண்டும்...
இப்போதும் கூட சில கிராமங்களில் பெண்ணும் ஆணும் நேராக பார்க்காமல் திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி இருக்கும் பொது ஒரு முன்னுறு ஆண்டுகுளுக்கு முன் நாம் செல்வதாக சிந்தித்து பாருங்கள்.
திருமணம் --- சில நூற்றண்டுகுளுக்கு முன்பு ஒரு பார்வை
அப்போது ...
- பேருந்து வசதி கிடையாது
- புகைப்படம் பார்க்கும் வைப்பு கிடையாது
- பெண்ணை நேராக பார்க்க கூடாது
- தொலைபேசி வழி தொடர்பு கிடையாது
- அப்போது திருமணம் எனபது முக்கியகமாக வியாபரம் கிடையாது
ஒரு பெண் பதினாறு வயது கடந்தாலே அது திருமணத்திற்கு அதிக வயது ( முப்பது வருடம் மும்பு வந்த பாரதிராஜா படம் கூட பதினாறு வயதிலே என்ற பெயர் உண்டு , அப்போது யோசித்து பாருங்கள், நாம் இன்னும் மூநூறு ஆண்டு பின்பு இருகின்றோம் )
ஒரு ஆணுக்கு இருபது வயதே திருமண நடக்க அதிகம்.வரவேண்டிய வயது.
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஒருவரை ஒருவர் பார்க்காமல் எவ்வாறு திருமணம் செய்வது , எவ்வாறு இருவரின் எடை, உயரம் இவற்றை அளப்பது, இதற்கு ஓரளவிற்கு உதவிய ஒரு புள்ளி விவரம் தான் யோனி பொருத்தம்.
அதாவது சித்திரை நட்ச்சதிரம் என்றால் பொதுவாக ஒல்லியாக இருப்பார்கள் என்று அதற்கு ஒரு மிருகம் பெயர் கொடுத்து விட்டனர். அதே போன்று சம உடல் வாகு உடைய பிற நட்ச்சதிரம் நட்பான மிருக பெயரை கொடுத்தனர், நட்பு மிருகம் என்றால் இடை, உயரம் பொருந்தும் எனவே ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என்ற ஒரு கணக்கு தான். அனால் புள்ளி விவரம் எப்போதும் சரியாய் இருபதில்லை , அதிலும் சிற தவறுகள் இருக்கும்.
இந்த சூழலில் ....
ஆண் மற்றும் பெண் உடல் வாகு, எடை ஆகியவற்றை கணக்கு இடுவதற்கு ஓரளவிற்கு துணை புரிய வந்தது தன் இந்த யோனி பொருத்தம்,
அதாவது இந்த நட்சதிரம் ஆண் இந்த யோனி வகை என்றால் அவன் ஒல்லியாக இருப்பான, குண்டாக இருப்பான் , எனவே ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும் என்ற கணக்கு பார்க்க உதவியது இன்று வேறு மாதிரி ஆகிவிட்டது.இன்றும் ஒரு எனபது வயதான ஜோதிடருக்கு கூட ஏன் ஒரு நட்சத்திதிற்கு ஒரு மிருகம் பெயர் உண்டு, அதன் பின்னணி என்ன என்று கேட்டல் பதில் தெரியாது , ஆனால் யோனி பொருத்தம் கட்டாயம் வேண்டும் என்பார்கள்.
எனவே பெண்ணை ஆண் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு இருக்கும் இந்த காலத்தில் இந்த யோனி பொருத்தம் எல்லாம் குப்பையில் தூக்கி போடா வேண்டியவை...
யோனி பொருத்தம் பார்கவில்லை ... மனம் உருதுமே ... அப்போது எப்படி திருமணத்தை தீர்மானிப்பது ....
யோனி பொருத்தம் சொல்வதை கட்டிலும் அதன் சாரம்சத்தை உணர்த்தும் பொருத்தம் இப்போது பாருங்கள்....
திருமணம் செய்ய முக்கியமான பொருத்தம் - யோனி பொருத்தம் சொல்லும் சாராம்சம் இதில் வந்து விடும் நூறு சதவிகிதம்.
இது இருந்தால் யோனி பொருத்தம் ஆயிரம் சதவிதம் உண்டு என்று அர்த்தம்.உங்கள் அட்டவணையில் புலி மான் என்று வந்தால் கூட அதை ஒதுக்குங்கள், இது இருந்தால் பொதும்.
இன்று நடப்தோ தலை கீழ்.....யோனி பொருத்தம் என்ற பெயரில் பல திருமண விழாவில் நான் பார்த்திருக்கிறேன் ....
ஒல்லி ஆணுக்கு மிக குண்டான பெண்ணும் (எடை பொருத்தம் இல்லை )
குண்டான ஆணுக்கு மிக ஒல்லி பெண்ணும் (எடை பொருத்தம் இல்லை )
ஆறு அடி உயரம் உடைய ஆணுக்கு ஐந்தடி உயரம் உள்ள பெண்ணும் (உயர பொருத்தம் இல்லை)
கருப்பு நிற ஆணுக்கு வெள்ளை நிற பெண்ணும் (நிற பொருத்தம் இல்லை)
வெள்ளை நிற ஆணுக்கு கருப்பு நிற பெண்ணும் (நிற பொருத்தம் இல்லை)
இவ்வாறு சற்றும் ஜோடி பொருத்தம் இல்லாமல் , வெறும் படிப்பறிவில்லாத ஜோதிடர், ஏதோ ஒரு மூடன் எழுதிய யோனி பொறுத்த அட்டவணை சரி பார்த்து சொன்னதால் திருமணம் பொருத்தம் இல்லாத இரு நபருக்கு திருமணங்கள் இன்று பெற்றோரர்களால் திணிக்கப்பட்டு நடக்கின்றது.
இதில் மிக பெரும் தவறு இளைப்பவர்கள் பெற்றோர்களே, காரணம் ஒரு மூட ஜோதிடர் சொன்னதை கேட்டு ஏன் இந்த கணினி யுகத்தில் செயல் பட வேண்டும்
எடை, உயரம், நிறம் இந்த மூன்றும் பொருந்தினால் பொது யோனி என்பதெல்லாம் பொய்.
இன்னும் ஒரு படி மேலே சென்று யோனி பொருத்தம் இருந்தால் தான் குடும்பத்தில் அன்யோன்யம் இருக்கும் என்று சொல்லும் மூடர்கள் உண்டு.
இருவருக்கு இடையில் உண்யமான அன்பு மற்றும் காதல் இருந்தால் தான் அன்யோன்யம் தானாக வரும், யோனியல் அன்யோன்யம் வராது.
இருவருக்கும் இடையில் அன்பு இருக்க வேண்டும் என்றால் , இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும், ஜோதிடருக்கு பிடிதிருப்தர்காக இருவரையும் இணைக்க கூடாது..
Regards
P Renjith Kumar
3 comments:
Really thanks
Really thanks
thankyou sir
Post a Comment