.
நானும் என் அம்மாவும் வழக்கமாக ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லுவது வழக்கம், அன்றும் அப்படிதான் என் வீட்டின் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் பின்புறம்வரும் பொழுது
ஒரு சிறு சலசலப்பு , என் அம்மா வண்டியை நிறுத்த சொல்ல, அந்த சலசலப்பு ஒரு கழிவு நீர் டிச்சு உள்ளே இருந்து வந்தது, அது ஒரு அடி உள்ள நீர் தேக்கம் தான். அதில் ஒரு சிறிய அட்டு குட்டி மிகுந்த சத்தம் போட்டு ஓலம் இட்டு
கொண்டு இருந்தது. ஏதோ குடத்தில் உள்ள களிநீரை குடிக்க அதன் தலையை விட்டு குடம் தலையில் சிக்கிகொண்டது இப்போது அதனால் தலையை வெளியில் எடுக்க முடியாமல் ஓலம் இட்டு கொண்டு இருந்தது. அந்த குட்டி ஆட்டின் அருகில் ஒரு பெரிய பெண் ஆடு மற்றும் இரண்டு சிறிய ஆடு செய்வது அரியது நின்று கொண்டு இருந்தது.
என் அம்மா நிற்பதை பார்த்து அங்கு இரு பெண்மணி வந்தனர், அங்கே ஒரு இளைஞனும் இருந்தான், உடனேஅவனை என் அம்மா அட்டை பிடித்து இழுக்க சொன்னார், அது வேலை செய்யவில்லை தலை நன்றாக சிக்கி இருந்தது உடனே ஒரே வழி குடத்தை உடை என்று அம்மா சொன்னார், அந்த இளைஞன் தயங்கவே, தம்பி உயிர் தான் முக்கியம் குடம் போனால் பரவாயில்லை என்றார். உடனே அவன் குடத்தை உடைதான், இப்போது தலை வெளியில் வந்தது இருந்தும் கழுத்தில் அரை குடம் இருந்தது , பார்வை இப்போது தெரிந்ததால் அப்போது தன் அந்த ஆடு கத்துவதை நிறுத்தியது, பிறகு குடத்தை வெளியில் எடுப்பதற்குள் அது உடைந்த குடத்துடனே ஆனந்ந்தமாக ஓடியது
அதை பார்க்கும் பொது ஒரே சந்தோஷம், அந்த சந்தோசத்துடன் கோவில் சென்று சாமி கும்பிட்டோம்.
P Renjith Kumar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment