Sunday, August 28, 2011

என் பெற்றோர் எனக்கு புகட்டும் அனுபவ பாடம்

.
என் பெற்றோர் எனக்கு புகட்டும் அனுபவ பாடம்

என் பெற்றோர் செய்த ஒரு நற்செயலை நான் இங்கு சொல்ல அசை படுகிறேன். பல செயல்கள் இது போல செய்து இருந்தாலும் இதைநான் மறக்க கூடாது என்று இங்கு பதிவு செய்கிறேன்.

சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரும் பள்ளியின் பேருந்து நிலையம் அருகில் என் சித்தியை பஸ் ஏற்றி விட சென்ற போது அங்கு இரு இளம் வயது பெண்கள் முகத்தில் சிறிது கலக்கத்துடன் காண படவும் என் அன்னை அதை புரிந்து கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க...அவர்கள் இருவரில் ஒருவர் பெங்களூரில் இருந்தும், இன்னொரு பெண் ஊட்டியில் இருந்தும் C.T.S கோயம்புத்தூர் கம்பெனியில் பனி புரிவதாகவும், ஈச்சனாரி என்னும் புகழ் பெற்ற விநாயகர் கோவிலுக்கு பேருந்து ஏறி வரும் போது, ஈச்சனாரி என்று சொலாததால், இந்த கிராமத்தின் வழியே வரும் மினி பஸ் இங்கு உள்ள விநாயகர் கோவிலில் இறக்கி விட்டு விட்டதாகவும், இப்போது தங்கள் ரூம் வரை மீண்டும் திரும்பி செல்ல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எங்கு உள்ளது என்று கூட தெரியாது என்று கலக்கத்துடன் கூறினர்.

உண்மையில் பேருந்து நிலையம் 1.5 k.m நடந்து செல்ல வேண்டும், ஏன் என்றால் அவர்கள் எங்கள் கிராமத்தின் மத்தியில் இறங்கி விட்டனர். மினி பஸ்ஸூம் உடனே அங்கு திரும்பி வராது உடனே என் அன்னை அவர்கள் நிலையை புரிந்து கொண்டு, என் அப்பாவை புறப்பட்டு அங்கு வர சொன்னார். என் அப்பாவும் அங்கு சென்றார். உடனே என் அன்னை அவர்களிடம், நீங்கள் எங்கோ இருந்து ஆசையுடன் இங்கு ஈச்சனாரி விநாயகரை தரிசிக்க வந்திருக்கிறீர்கள், இப்போது இருட்டிவிட்டது உங்களுக்கு ஊரும் புதியது, எனவே நாங்கள் இருவரும் உங்களுக்கு ஈச்சனாரி விநாயகர் கூடி கொண்டு போய் காண்பிக்கிறோம் என்று, 1.5 km நால்வரும் நடந்து சென்று, ஈச்சனாரி செல்லும் பேருந்து ஏறி, அங்கு சென்று கோவிலை சுற்றி காண்பித்து, அங்கு தங்க தேர் பவனி வரும் போது அதையும் காண்பித்து, அவர்களை நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய வைத்து, அங்கு இருந்து அவர்கள் தங்கி இருக்கும் இடம் வரை நங்கள் வந்து விடட்டுமா என்று கேட்க அந்த இரு பெண்களும், இல்லை எங்களுக்கு காந்திபுரம் பேருந்து ஏற்றி விட்டால் நங்கள் அங்கிருந்து எளிதாக சென்றுவிடுவோம் என்று கூற, காந்திபுரத்திலிருந்து கண்டிப்பாக அவர்களுக்கு வழி தெரியுமா என்பதை அவர்களிடம் மீண்டும் உறுதி படுத்திக்கொண்டு, அவர்களுக்கு அங்கிருந்து வழி தெரியும் என்று தெரிந்தவுடன் சரி நங்கள் இங்கு இருந்து நேராக காந்திரம் செல்லும் பேருந்து ஏற்றி விடுகிறோம் என்று என் பெற்றோர் கூறினர். பிறகு அந்த இரு பெண்களும், என் பெற்றோரை தாங்கள் இருவருக்கும் மலர் தூவி ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டு கொண்டனர், அவர்களும் என் பெற்றோருக்கு பிள்ளைகள் போல தானே... என் பெற்றோரும் அவ்வாறே அந்த பிள்ளைகளுக்கு..என் சகோதிரிகளுக்கு ஆசிர்வாதம் செய்து பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ ராம ஜெயம் .
ஈச்சனாரி விநாயகரே சரணம்.

இப்படிக்கு
ப. ரஞ்சித் குமார்
P Renjith Kumar


No comments: