Monday, January 19, 2015

Health and Fitness

.

Best Breakfast and Best Indian Food recognized by WHO.

 
 
 
Regards
P Renjith Kumar
 
 


Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துகள்

.
இன்று சூரியனையும் நாளை மாடுகளை தெய்வமாக , மறுநாள் உழவர்களையும் , உழவு தொழில் சாதனங்களையும் வழிபடப் போகும் தமிழர்களுக்கு என் நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

உலக நாகரிங்களில் எங்கெல்லாம் சூரிய வழிபாடு இருக்கிறதோ அதுவெல்லாம் பழமையான நாகரீகம் என்று எடுத்து கொள்ளலாம்.இந்த உலகுக்கு உணவு கொடுத்து உதவும் பயிர்களுக்கு உயிர் தான் சூரிய ஒழி, அதை உலக உயிர்களுக்கு கொடுத்த சூரியனுக்கு நன்றி கூறும் திருவிழா தான் பொங்கல். சூரியன் மட்டும் அல்லாமல் உழவுக்கு துணை புரிந்த மாடுகளையும் நன்றி கூறும் கலாச்சாரம் பழமைக்கெல்லாம் பழமை வாய்ந்தது.
நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தான் பூமியின் உயிர்ப்புக்கு ஆதாரம். எனவே புது நெல் அரிசியை நிலத்தில் மடியில் மண் பானையால், நெருப்பு கொண்டு, நீர் ஊற்றி கொதிக்க வைத்து, காற்றில் பொங்கி வர, ஆகாயத்தில் இருக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு அற்புத விழா, இது இயற்கை அன்னையை கொண்டாடும் விழா.

Regards
Renjith

Monday, January 12, 2015

மார்கழி திங்கள் - திங்கள் கிழமை

.

பொதுவாக திங்கள் கிழமை எனக்கு மிகவும் பிரியமானது. சோமவாரம் அதாவது திங்கள் கிழமை சிவனுக்கு உகந்தது என்பதால் இன்னும் பிரியம் . சோமநாதர் என்று ஒரு ஜோதிர் லிங்க பெயரும் கூட அமைந்தது இதன் பெருமையை கூறும்.

அப்படி பட்ட திங்கள் கிழமை நன்னாளில் எந்த ஒரு முக்கியமான செயலும் செய்ய எனக்கு விருப்பம்.

உலக நலன் மட்டுமே சிவன் அருளும் திங்கள் கிழமைகளில் எனது சிந்தனையில் இருக்கும், என்னை பற்றி என்னும் சுயநலம் இருக்காது. உபவாசம் இருக்கும் பெரும் பேரு சிலநாள் எனக்கு சிவன் அருளால் கிட்டும். என் தாயும் உபவாசம் இருக்கும் பேரு சிவன் அருளால் கிட்டும். கோவையில் எனது இல்லம் அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் திருகொவிலுக்கு என் தாயும் தந்தையும் திங்கள் கிழமை நன்னாளில் சென்று வழிபடுவது வழக்கம்.

அப்படி பட்ட திங்கள் கிழமை மார்கழி மாதம் வந்தால் அது இன்னும் விசேஷம் இல்லையா?

எனவே தான் நான் இவ்வளவு நாள் தனியாக தொகுத்து வந்த திருப்பவை மற்றும் திருவெம்பாவை தொடரை மார்கழி திங்கள் - திங்கள் கிழமை அன்று நிறைவு செய்கிறேன்.இந்த தெய்விக பாடல்களின் தொகுப்பு ஒருவருக்கு பயன்பட்டாலும் இதை கடவுளின் அருளாக கருதுவேன்.


அனைவருக்கு சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.

உண்மையான பக்திக்கு ஆண்டாள் உதாரணம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் 
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!



என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம் ...
மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்
!


என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு கூறுகிறார்.


**வாழி ஆண்டாள் அன்னையின் திருநாமம்**


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைவாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே



சிவ வழிபாடு ...

ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி.

காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.



ஈச்சனாரி விநாயகரே போற்றி
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தொட்டமன் சின்னம்மன் தாயே போற்றி

ஓம் நமோ நாராயணாய
ஒம் நம சிவாய 


Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 30 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !



 "இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 30

.


 
 

பாசுரம்
 
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை  அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.



பொருள்

திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை
சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து
விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு),
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை
அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த
திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள்
நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால்
திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 29 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !


விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 29

.
 
 
 

பாசுரம்
 
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து,  உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்  உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.


பொருள்

மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
 
 

திருவெம்பாவை பாடல் - 28 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !


முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 28

.
 
 
 

பாசுரம்
 
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து  உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா  உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம்.
அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள்
உன்னை எங்களுடன் குலத்தவனாக பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம்
எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா!
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது
அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள்,
அன்பால் அழைத்தைப் பொறுத்துக் கோபம் கொள்ளாமல்
எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்




திருவெம்பாவை பாடல் - 27 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !


"அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 27

.

 
 
பாசுரம்
 
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!  உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.




பொருள்

பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 26 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !


விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 26

.
 
 
 

பாசுரம்
 
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே;
ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 25 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !


"பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.



Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 25

.


 
 

பாசுரம்
 
ஒருத்தி மகனாய்ப் பிறந்து,  ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தா¢க்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!  உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோ

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 24 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !


ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
    (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 24

.
 
 
பாசுரம்
 
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மஹாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
தென் இலங்கையைச் சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்!
சகடாசுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழை போற்றுகிறோம்!
கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரிகருவியாகக் கொன்றாய்! உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே! உன் குணத்தைப் போற்றுகிறோம்!
பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம்!
இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்களை
நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம், நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.


Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 23 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

கூவின பூங்குயில்; கூவின கோழி;
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !


குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 23

.
 
 
 

பாசுரம்
 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!  உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,  கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து,  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும்
வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக்
கர்ஜனை செய்து வெளியில் வருவது போல
காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே,
நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து,
நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 22 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !




 அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன்
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற)
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 22

.
 
 
 
 
 
பாசுரம்
 
அங்கண் மா ஞாலத்து அரசர்  அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி
உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 21 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !




 போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சேறு - கள்/ தேன்; ஏறு - இடபம்


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 21

.
 
 
 

பாசுரம்
 
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்!  உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய
தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை
அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக்கொள்!
சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்
அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.
எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்
கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல
நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்


திருவெம்பாவை பாடல் - 20 (திருவண்ணாமலையில் அருளியது)

.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.


போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.


திருச்சிற்றம்பலம்

hanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமா

திருப்பாவை பாசுரம் - 20

.
 
 
 
பாசுரம்
 
 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

முப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று
அவர்களின் நடுக்கத்தை போக்கும் வீரனே எழுந்திரு!
கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு
பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு
தங்க கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை
உடைய நப்பின்னையே!, திருமகளே! எழுந்திரு
விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து
எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.


Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமா

திருவெம்பாவை பாடல் - 19 (திருவண்ணாமலையில் அருளியது)

.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


"உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்",
என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக்
கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும்
செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும்
கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ
அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவ

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 19

.
 
 
 

பாசுரம்
 
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பி¡¢வு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.


பொருள்

நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில்
மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது
கொத்துதாக மலர்ந்திருக்கும் பூக்களை சூட்டிய கூந்தலுடைய
நப்பின்னையின் மார்பில் தலையை வைத்து கொள்பவனே வாய்திறந்து பேசு!
மைக் கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை சிறுபொழுதும்
படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை.
கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய்
ஆ! நீ இப்படி (எதிராக)இருப்பது நியாமும் ஆகாது குணமும் ஆகாது.


Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 18 (திருவண்ணாமலையில் அருளியது)

.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்



அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும்,
விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம்
(இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து
தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன் மற்றெவரும்
சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி
இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு,
விண்மீன்கள் காணாது போகின்றன. பெண், ஆண், அலி மற்றும்
ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று, இவை
அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள்
பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட திருவடிகளைப்
பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே !

வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 18

.




 
 
பாசுரம்
 
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்,  மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத
தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!
குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க
மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.

குறிப்பு

**ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை**

ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார்.

“உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர்.
இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்