Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 23

.
 
 
 

பாசுரம்
 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!  உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,  கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து,  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும்
வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக்
கர்ஜனை செய்து வெளியில் வருவது போல
காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே,
நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து,
நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: