Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 30

.


 
 

பாசுரம்
 
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை  அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.



பொருள்

திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை
சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து
விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு),
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை
அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த
திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள்
நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால்
திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: