Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 19

.
 
 
 

பாசுரம்
 
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பி¡¢வு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.


பொருள்

நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில்
மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது
கொத்துதாக மலர்ந்திருக்கும் பூக்களை சூட்டிய கூந்தலுடைய
நப்பின்னையின் மார்பில் தலையை வைத்து கொள்பவனே வாய்திறந்து பேசு!
மைக் கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை சிறுபொழுதும்
படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை.
கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய்
ஆ! நீ இப்படி (எதிராக)இருப்பது நியாமும் ஆகாது குணமும் ஆகாது.


Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: