.
பொதுவாக திங்கள் கிழமை எனக்கு மிகவும் பிரியமானது. சோமவாரம் அதாவது திங்கள் கிழமை சிவனுக்கு உகந்தது என்பதால் இன்னும் பிரியம் . சோமநாதர் என்று ஒரு ஜோதிர் லிங்க பெயரும் கூட அமைந்தது இதன் பெருமையை கூறும்.
அப்படி பட்ட திங்கள் கிழமை நன்னாளில் எந்த ஒரு முக்கியமான செயலும் செய்ய எனக்கு விருப்பம்.
உலக நலன் மட்டுமே சிவன் அருளும் திங்கள் கிழமைகளில் எனது சிந்தனையில் இருக்கும், என்னை பற்றி என்னும் சுயநலம் இருக்காது. உபவாசம் இருக்கும் பெரும் பேரு சிலநாள் எனக்கு சிவன் அருளால் கிட்டும். என் தாயும் உபவாசம் இருக்கும் பேரு சிவன் அருளால் கிட்டும். கோவையில் எனது இல்லம் அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் திருகொவிலுக்கு என் தாயும் தந்தையும் திங்கள் கிழமை நன்னாளில் சென்று வழிபடுவது வழக்கம்.
அப்படி பட்ட திங்கள் கிழமை மார்கழி மாதம் வந்தால் அது இன்னும் விசேஷம் இல்லையா?
எனவே தான் நான் இவ்வளவு நாள் தனியாக தொகுத்து வந்த திருப்பவை மற்றும் திருவெம்பாவை தொடரை மார்கழி திங்கள் - திங்கள் கிழமை அன்று நிறைவு செய்கிறேன்.இந்த தெய்விக பாடல்களின் தொகுப்பு ஒருவருக்கு பயன்பட்டாலும் இதை கடவுளின் அருளாக கருதுவேன்.
அனைவருக்கு சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
உண்மையான பக்திக்கு ஆண்டாள் உதாரணம்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!
என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம் ...
மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு கூறுகிறார்.
**வாழி ஆண்டாள் அன்னையின் திருநாமம்**
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைவாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
சிவ வழிபாடு ...
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி.
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
ஈச்சனாரி விநாயகரே போற்றி
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தொட்டமன் சின்னம்மன் தாயே போற்றி
ஓம் நமோ நாராயணாய
ஒம் நம சிவாய
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment