Monday, January 12, 2015

திருவெம்பாவை பாடல் - 19 (திருவண்ணாமலையில் அருளியது)

.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


"உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்",
என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக்
கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும்
செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும்
கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ
அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவ

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: