Saturday, December 13, 2014

கம்ப ராமாயணம் - சிறப்பான பாடல்கள் - 1


.

ராமனுடைய அற்புத குணத்தை சொல்லும் இந்த பாடல்  எனக்கு மிகவும் பிடித்தது .இதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன , நவீன நிர்வாக சாரம் கூட இதில் உள்ளது , படித்து ஆராய்ந்தால் உங்களுக்கு புரியும்




           ‘ “  ஆழி சூழ் உலகம் எல்லாம்
                     பரதனே ஆள, நீ போய்த்
                 தாழ் இருஞ் சடைகள் தாங்கி,
                     தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
                 பூழி வெங் கானம் நண்ணி,
                    புண்ணியத் துறைகள் ஆடி,
                 ஏழ் - இரண்டு ஆண்டின் வா” என்று,
                     இயம்பினன் அரசன்’ என்றாள்.




‘ஆழி சூழ் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும்;

பரதனே ஆள- பரதனே முடிசூடி ஆண்டுகொண்டிருக்க;நீபோய் - நீ நாட்டை விட்டுச் சென்று; 

தாழ் இருஞ் சடைகள் தாங்கி -  தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக்கொண்டு; 

தாங்க அருந் தவம் மேற்கொண்டு - தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று; 

பூழி வெம் கானம் நண்ணி - புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து; 

புண்ணியத் துறைகள் ஆடி - புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி; 

ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று - பதினான்குஆண்டுகள் கழித்த பின்பு திரும்பிவருவாய் என்று;

அரசன் இயம்பினன் என்றாள் - அரசன்கொன்னான் என்றாள்.


  இது, கைகேயியின் மனத்தையும் அவள் பேச்சின் நயத்தையும்
காட்டுகிறது. பரதனே என்பதில்உள்ள பிரிநிலை ஏகாரம் அவள்
ஆசையைக் காட்டுகிறது.  தாழ்இருஞ் சடை  தாங்குதல்,  தவம்
மேற்கொள்ளல்,  கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய
நற்பயன்கள் கிட்டவேஅரசன் இவ்வாறு பணித்தான் என்று கூறித் தான்
வரங்கேட்டதை மறைத்தலின் அவளது  வஞ்சகம்தெரிகிறது.  பதினான்கு
ஆண்டுகள் என்னாது  ‘ஏழ் இரண்டு ஆண்டு’  என்று சுருக்கிக் கூறுதல்
அவளது கரவுப் பேச்சைப் புலப்படுத்துகிறது. தான் பழியற்றவள் என்பதைக்
காட்டுவதற்காக ‘இயம்பினன்அரசன்’  என்றாள். 

மேலும் தந்தை என்னாது அரசன் கூறினான் என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது     என்பதைச் சுட்டினாள்





அதற்கு மிக அழகாக பதில் கொடுத்த ராமன்


     ‘மன்னவன் பணி அன்றாகின்,
         நும் பணி மறுப்பெனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம்
     அடியனேன் பெற்றது அன்றோ?
   என் இனி உறுதி அப்பால்?
     இப் பணி தலைமேல் கொண்டேன்;
  மின் ஒளிர் கானம் இன்றே
     போகின்றேன்; விடையும்             கொண்டேன்.’
 

‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று     என்றாலும்; 
 
நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான்     செய்யமாட்டேன் என்பேனோ?;

என் பின்னவன்பெற்ற செல்வம் - என்     தம்பி பரதன் அடைந்த பேறு; 

அடியனேன் பெற்றது அன்றோ -நான்     அடைந்தது அன்றோ?;

அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான     நன்மை வேறுயாது?; 

இப் பணி தலைமேல் கொண்டேன் -  இக்கட்டளையைத் லையின்மேல்ஏற்றுக்கொண்டேன்; 

மின் ஒளிர்     கானம் - மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு; 

இன்றே     போகின்றேன் - இப்பொழுதே போகின்றேன்; 

விடையும்கொண்டேன் -  நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன். 


அரசன் கட்டளையிட வேண்டும் என்பதில்லை; தமது (கைகேயி) கட்டளையே     போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன்.




Regards
P Renjith Kumar

1 comment:

Unknown said...

நன்றி ஐயா