Saturday, December 20, 2014

திருப்பாவை பாசுரம் - 5

.

திருப்பாவை ஐந்தாம் நாள்

 
 
 
பாசுரம்
 
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர்  யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால்
நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும்
அகவே அவன் நாமங்களைச் சொல்
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: