Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் - 11

.

 
 
 
பாசுரம்
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்

குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவா
 
பொருள்
 
இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்
பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!
பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா
உறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்
உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.
அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே!
உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: