Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் - 12

.
 
 
 
பாசுரம்
 
கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம்
நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.
 

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

 

No comments: