Wednesday, December 31, 2014

திருப்பாவை பாசுரம் - 15

.

 
 
 
பாசுரம்
 
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;

வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை  மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்
 
பொருள்
 
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்._
_
[எழுப்புபவர்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?
[எழுந்திருப்பவர்] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[எழுப்புபவர்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[எழுந்திருப்பவர்] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[எழுப்புபவர்] நீ உடனே புறப்பட்டு வா வேறு என்ன வேலை இருக்கிறது ?
[எழுந்திருப்பவர்] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[எழுப்புபவர்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார்.
குவலயாபீட யாணையையும் கம்சன் முதலிய பகைவர்களையும்
அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா

Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: